Home /News /business /

60% தள்ளுபடி விலையில் Amazon Prime சந்தா: எப்படி பெறுவது?

60% தள்ளுபடி விலையில் Amazon Prime சந்தா: எப்படி பெறுவது?

Amazon Prime - அமேசான் பிரைம்

Amazon Prime - அமேசான் பிரைம்

Amazon Prime: இளைஞர்களுக்கான இந்த சிறப்பு சலுகை, மாதாந்திர மெம்பர்ஷிப், மூன்று மாத மெம்பர்ஷிப் திட்டம் மற்றும் வருடாந்திர மெம்பர்ஷிப் திட்டம் என்று மூன்று வகைகளில் கிடைக்கிறது.

    சில மாதங்களுக்கு முன் Amazon நிறுவனம் தனது Prime சந்தா விலையை அதிகரித்தது. கிட்டத்தட்ட 50% வரை சந்தா தொகை அதிகரிக்கப்பட்டதால், பலரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் சந்தா விலையை அதிகரிக்க போகிறோம் என்ற தகவல் முன்கூட்டியே நிறுவனம் வெளியிடப்பட்டதால், குறிப்பிட்ட தேதிவரை பழைய விலையிலேயே சப்ஸ்கிரிப்ஷனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பின் மூலம் பலரும் பயன் பெற்றனர். தற்போது அமேசான் பிரைம் சந்தா 60 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கிறது. அதை எப்படி பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.

    OTT தளங்களின் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களாக இளைஞர்கள் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். தற்போது ஊரடங்கு மற்றும் வொர்க் ஃபிரம் ஹோம் அல்லது ஆன்லைன் வழியாக கல்வி ஆகியவை இன்னும் தொடர்ந்து வருவதால் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக OTT தளங்களைப் பார்க்கிறார்கள். இதன் அடிப்படையில் அமேசான் பிரைம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் பெயர் பிரைம் ரெஃபரல் புரோகிராம். இது 18 வயது முதல் 24 வயதினருக்கான பிரத்யேகமான திட்டமாகும். இந்த திட்டத்தின் யூத் ஆஃபர் அதாவது இளைஞர்களுக்காக வழங்கப்படும் சலுகையில் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இளைஞர்களுக்கான இந்த சிறப்பு சலுகை, மாதாந்திர மெம்பர்ஷிப், மூன்று மாத மெம்பர்ஷிப் திட்டம் மற்றும் வருடாந்திர மெம்பர்ஷிப் திட்டம் என்று மூன்று வகைகளில் கிடைக்கிறது.

    Also read: தபால் அலுவலகத்தில் டைம் டெபாசிட் கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?

    மாதாந்திர சந்தா தொகை ரூ. 179
    மூன்று மாத சந்தா தொகை ரூ. 479
    ஓராண்டு சந்தா தொகை ரூ. 1499

    இந்த சலுகைகளுடன் நீங்கள் மாதாந்திர சந்தாவில் ரூ. 90 கேஷ் பேக் சலுகை மற்றும் ரெஃபரல் ரிவார்ட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 18 உங்களுக்கு கூடுதலான கேஷ் பேக்காக கிடைக்கும்.

    மூன்று ஆண்டு கால சந்தாவில் ரூ. 230 கேஷ் பேக் சலுகை மற்றும் ரெஃபரல் ரிவார்ட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 46 உங்களுக்கு கூடுதலான கேஷ் பேக்காக கிடைக்கும்.

    ஓராண்டு ஆண்டு கால சந்தாவில் ரூ. 750 கேஷ் பேக் சலுகை மற்றும் ரெஃபரல் ரிவார்ட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 46 கூடுதலான கேஷ் பேக்காக கிடைக்கும்.

    இதையும் படியுங்கள் : எஸ்பிஐ மூலமாக ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டத்தில் இணையலாம் - வழிமுறைகள் இதோ…

    மேலும் உங்கள் நண்பர்கள் இந்த பிரைம் திட்டத்தில் சேரும் பொழுது அவர்களுடைய வயது சரிபார்க்கப்பட்ட பின்பு உங்களுக்கு 15 நாட்கள் இலவசமாக பிரைம் மெம்பர்ஷிப் நீட்டிக்கப்படும். அதுமட்டுமின்றி உங்கள் நண்பர் எந்த பிரைம் திட்டத்தை வாங்குகிறாரோ, அந்த திட்டத்தில் அவருக்கு 60% தள்ளுபடி கிடைக்கும்.

    இதன் மூலம் பிரைம் சந்தாவை நீங்கள் 60% குறைந்த விலையில் பெறலாம்
    Published by:Arun
    First published:

    Tags: Amazon, Amazon Prime

    அடுத்த செய்தி