ஹோம் /நியூஸ் /வணிகம் /

Amazon Monsoon Carnival : வாவ் சொல்ல வைக்கும் அமோசனின் அசத்தல் தள்ளுபடி!

Amazon Monsoon Carnival : வாவ் சொல்ல வைக்கும் அமோசனின் அசத்தல் தள்ளுபடி!

அமேசான்

அமேசான்

Amazon Monsoon Carnival | அமேசான் 'மான்சூன் கார்னிவல்' 60 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து கூடுதல் சலுகைகள் அறிவிக்ப்பட்டுள்ளது.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :

  அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அமேசான் ஜூன் 07 முதல் ஜூன் 12, 2022 வரை தனது Amazon Monsoon Carnival  கிக்ஸ்டார்ட் செய்துள்ளது. இந்த முறை வாட்டர்ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ், டிவி, வீடு மற்றும் சமையலறைக்கு தேவையான ஆயிரக்கணக்கான பொருட்கள் பெரும் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் உபகரணங்கள், மளிகை பொருட்கள், அழகு மற்றும் பேஷன், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை மீதும் அட்ராக்டிவான தள்ளுபடியை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

  அமேசான் 'மான்சூன் கார்னிவல்' 60 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து கூடுதல் சலுகைகளுடன் கிடைக்கூடிய சில பொருட்களின் பட்டியல் இதோ...

  ஸ்மார்ட்போன்கள், கேஜெட்டுகள் மற்றும் மொபைல் அக்சஸரீஸ்:

  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 11 (Redmi Note 11) அமேசானில் 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரியின் விலை 17,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 28 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஸ்டார்டஸ்ட் வைட், ஹொரிசான் ப்ளூ, ஸ்பேஸ் ப்ளூ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் நோட் 11 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா, 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங், 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை , 50 மெகாபிக்சல் சாம்சங் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளன.

  Also Read : SBI விடுத்த எச்சரிக்கை.. மொபைலுக்கு இப்படி மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையா இருங்கள்!

  இதேபோல் சாம்சங் கேலக்ஸி எம் 32 (Samsung Galaxy M32 ) (Light Blue, 6GB RAM, 128GB) ரூ.13,999க்கு கிடைக்கிறது. ரூ.18,998 நிர்ணய விலையுள்ள இந்த ஸ்மார்ட் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 128 ஜிபி சேமிப்பு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி, வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் 26 சதவீத தள்ளுபடியுடன் 13,999 ரூபாய்-க்கு வாங்கலாம்.

  இதேபோல் Boat Airdopes 141 42H Playtime இப்போது ரூ.1,499க்கு கிடைக்கிறது. அலெக்ஸா பில்ட்-இன் கொண்ட Fastrack Reflex VOX Smartwatch ஐ ரூ. 4,995க்கு வாங்கலாம், மேலும் Chumbak Squad 2.0 Smartwatch தள்ளுபடி விலையில் ரூ.2,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் டி.வி:

  ஐஎஃப்பி நிறுவனத்தின் 6 கிலோ 5 ஸ்டார் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் ஃப்ரண்ட்-லோடிங் வாஷிங் மெஷின் இப்போது ரூ.22,490க்கு கிடைக்கிறது.

  ரெட்மி 80 செ.மீ (32 இன்ஞ்) எச்.டி. ரெடி ஸ்மார்ட் எல்இடி டி.வி. (Redmi 80 cm (32 inches) HD Ready Smart LED TV )சுமார் 14,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதேபோல் Mi 125.7 செ.மீ (50 இன்ஞ்) அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி 4எக்ஸ் டிவி (Mi 125.7 cm (50 Inches) 4K Ultra HD Android Smart LED TV 4X ) சுமார் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

  அமேசான் சாதனங்கள்:

  எக்கோ டாட் (Echo Dot) (4வது ஜென்ரேஷன், 2020 வெளியீடு) (கருப்பு) தள்ளுபடி விலையில் சுமார் ரூ.3,999க்கு கிடைக்கிறது.

  ஃபயர் டிவி ஸ்டிக் (Fire TV Stick) (3rd ஜென்ரேஷன், 2021) ஒரு புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட் (டிவி மற்றும் ஆப்ஸ் கட்டுப்பாடுகள் உட்பட அமேசானில் சுமார் ரூ. 3,999க்கு கிடைக்கிறது.

  10th ஜென்ரேஷன் மற்றும் கண்ணை கூசும் தன்மை இல்லாத தொடுதிரையைக் கொண்ட Kindle சுமார் 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

  மேலும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக சேமிக்கும் விதமாக, பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகள் மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், கிரெடிட்/டெபிட் EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி வங்கி தள்ளுபடி போன்ற ஆப்ஷன்களையும் அமேசான் வழங்குகிறது. டெபிட் & கிரெடிட் கார்டுகளில் கட்டணமில்லா EMI, பரிமாற்றச் சலுகைகள் உள்ளிட்ட பல சிறப்பு சலுகைகள் காத்திருக்கின்றன. குறிப்பாக Amazon Pay யூஸர்கள், ஜூன் 11 மற்றும் 12, 2022 ஆகிய தேதிகளில் கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Amazon