ஹோம் /நியூஸ் /வணிகம் /

₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

அமேசான்,

அமேசான்,

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமேசானில் அதிக விலை கொண்ட Toshiba 2021 ரேஞ்ச் ஸ்பிளிட் ஏசிக்கு 94% தள்ளுபடி தரப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமேசான் ஷாப்பிங் தளத்தில் 96,000 ரூபாய் விலை கொண்ட 1.8 டன் டோஷிஃபா நிறுவன ஏசியின் விலை தள்ளுபடி போக 5800 ரூபாய்க்கு கிடைக்கும் என பட்டியலிடப்பட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அது அமேசான் தரப்பின் தவறு என தெரியவந்தது.

இ-காமர்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்கும் அமேசானை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் கடைக்கு சென்று வாங்கி வந்தவர்கள் கூட இன்று கைகளில் ஃபோனின் மூலம் ஆர்டர்களை கொடுத்து பொருட்களை வீட்டில் இருந்தே வாங்கிக் கொள்கிறார்கள். எனினும் அமேசானில் சில நேரங்களில் பொருட்களை வாங்கும் போது சிலருக்கு பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. உதாரணமாக ஐபோன் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு செங்கல் டெலிவரி செய்யப்பட்ட கதைகளை சொல்லலாம். இதே போல எண்ணற்றவர்களுக்கு தாங்கள் ஆர்டர் கொடுத்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட பொருளின் விலையிலேயே மிகப்பெரும் குளறுபடி நடந்தேறியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமேசானில் அதிக விலை கொண்ட Toshiba 2021 ரேஞ்ச் ஸ்பிளிட் ஏசிக்கு 94% தள்ளுபடி தரப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

Also Read: 6 வயது சிறுமியை 3 வருடமாக பாலியல் வன்புணர்வு செய்த கம்யூ தலைவர்!

டோஷிபா நிறுவனத்தின் 1.8 டன் 5 ஸ்டார் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசியின் உண்மையான விலை 96,700 ரூபாயாகும். ஆனால் இந்த ஏசி, 94% தள்ளுபடி விலையில் 5,900 ரூபாய்க்கே விற்பனைக்கு கிடைக்கும் எனவும், மாத தவணையாக 278 ரூபாய் செலுத்தினால் போதுமானது, 90,800 ரூபாயை மிச்சப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும் இது அமேசான் தரப்பின் தவறு என பின்னர் தெரியவந்தது. சுதாரித்துக் கொண்ட அமேசான் உடனடியாக இந்த தவறை சரிசெய்துவிட்டது. தற்போது அந்த ஏசியின் விலை 59,000 என மாற்றப்பட்டிருக்கிறது. (20% தள்ளுபடி) ஒரு சைபரை கூடுதலாக சேர்த்திருக்கின்றனர்.

எனினும் 5900-க்கு இந்த ஏசியை புக் செய்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள். அவர்களுக்கு இந்த ஏசி டெலிவரி ஆகுமா என்பது குறித்து அமேசான் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் இதுவரை வரவில்லை.

Published by:Arun
First published:

Tags: Amazon, Business