பெரும் முதலீட்டுடன் இந்தியாவுக்கு வந்திறங்கியுள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பீசோஸ்!

இந்தியாவில் அமேசானுக்கு எதிராக சிறு, குறு வணிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.

பெரும் முதலீட்டுடன் இந்தியாவுக்கு வந்திறங்கியுள்ள அமேசான் தலைவர் ஜெஃப் பீசோஸ்!
ஜெஃப் பீசோஸ்
  • News18
  • Last Updated: January 15, 2020, 4:24 PM IST
  • Share this:
இந்தியாவின் சிறு மற்றும் குறு வணிகங்களை ஊக்குவிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பீசோஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக அமேசான் தலைவர் ஜெஃப் பீசோஸ் இந்தியா வந்துள்ளார். முற்றிலும் முதலீடுகள் நிறைந்த வணிகப் பயணமாக அவரது வருகை உள்ளது. டெல்லியில் நடந்த அமேசான் விழாவில் இன்று பங்கேற்றுப் பேசியுள்ள ஜெஃப் பீசோஸ், “21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். வருகிற 2025-ம் ஆண்டுக்குள் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தமிட்டுள்ளோம்.

வேகம், ஆற்றல், வளர்ச்சி நிறைந்த இந்தியா என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக இது ஒரு ஜனநாயக நாடு. கவரும் அத்தனை அம்சங்களும் இந்தியாவில் உள்ளன. இந்தியாவின் சிறு குறு வணிகங்களை வளர்க்க இங்கு அமேசான் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்” என்றார்.


இந்தியாவில் அமேசானுக்கு எதிராக சிறு, குறு வணிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: பணமில்லா கிராமப்புற பொருளாதாரம்... இந்தியாவைத் தாக்கும் உணவுப் பஞ்சம்!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்