விநியோகப்பணிகளுக்கு பெண் பணியாளர்களை ஊக்குவிக்கிறது அமேசான்.. சென்னையை தொடர்ந்து இப்போது குஜராத்திலும்..

அமேசான்

சமீபத்தில், இந்த நிறுவனம் ஒரு விநியோக சேவை கூட்டாளரால் இயக்கப்படும் ஒரு விநியோக நிலையத்தை திறந்தது, இது திருநங்கைகளால் முழுமையாக இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

 • Share this:
  அமேசான் இந்தியா "அனைத்து விநியோக பணிகளுக்கு பெண் பணியாளர்கள் நிலையத்தை" சென்னைக்கு அடுத்தபடியாக குஜராத்தில் தொடங்கியுள்ளது. இணையவழி நிறுவனமான அமேசான் இந்தியா, வியாழக்கிழமை குஜராத்தின் காதி நகரில் அனைத்து பெண் பணியாளர்கள் நிலையத்தை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. டெலிவரி சேவை கூட்டாளரால் இயக்கப்படும் புதிய அனைத்து பெண்  பணியாளர்கள் நிலையம், தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காதி, குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 80,000 மக்கள் வசிக்கின்றனர். 2016ம் ஆண்டில், இந்நிறுவனம் தனது முதல் அனைத்து மகளிர்  பணியாளர்கள் நிலையத்தை இந்தியாவில் தொடங்கியது. அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையில் தொடங்கியது.  அங்கு இந்த நிறுவனம் சமூகத்துடன் ஊர்சார்ந்த அறிவை பயன்படுத்த தனது பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் டெலிவரிகளை எளிதாக்க அமேசான் இந்தியா தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. குஜராத்தில் உள்ள இந்த பெண் பணியாளர்கள் நிலையம் நிர்வாக மற்றும் டெலிவரி அசோசியேட் துறையில் உள்ள பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது மற்றும் நடத்தப்படுகிறது.

  அமேசான் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது வரை, எட்டு பெண்கள் இந்த வசதிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையத்திற்கு 2-5 கி.மீ சுற்றளவில் தொகுப்புகளை வழங்கும் கூட்டாளர்களுக்காக ஒரு ஹெல்ப்லைன் எண்ணும் உருவாக்கப்பட்டுள்ளது.

  பகலில் தேவைப்படும் எந்தவொரு ஆதரவிற்கும் அல்லது உதவிக்கும் டயல் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் இந்தியாவில் செயல்பாட்டு நெட்வொர்க் முழுவதும் "பெண்களுக்கு அர்த்தமுள்ள தொழில் வாய்ப்புகளை கண்டறிய உதவுவதே" எங்கள் நோக்கம். எங்கள் நெட்வொர்க் முழுவதும் பெண்களுக்கு 6,000க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

  அங்கு அவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்குகிறார்கள்" என்று கடைசி மைல் செயல்பாடுகளின் இயக்குனர் பிரகாஷ் ரோச்லானி கூறுகிறார். அமேசான் இந்தியா தனது நிறைவேற்றும் வலையமைப்பில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றார்.

  சமீபத்தில், இந்த நிறுவனம் ஒரு விநியோக சேவை கூட்டாளரால் இயக்கப்படும் ஒரு விநியோக நிலையத்தை திறந்தது, இது திருநங்கைகளால் முழுமையாக இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள தனது நெட்வொர்க்கில் முன்னாள் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Gunavathy
  First published: