பாரதி ஏர்டெல் பங்குகளை வாங்குகிறது முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்

பாரதி ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்லில் 5 விழுக்காடு பங்குகளை வாங்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

 • Share this:
  ஜியோ வருகைக்கு பிறகு பாரதி ஏர்டெல் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. மேலும், தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், ஏர்டெல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

  இந்நிலையில், முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக திகழ்ந்து வரும் அமேசான், ஏர்டெல் நிறுவனத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அமேசான்


  இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக அமேசான் 49,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் நிலையில், தற்போது தொலைதொடர்பு நிறுவனத்திலும் கால் பாதிக்கும் வகையில் ஏர்டெல் பங்குகளை வாங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

  மேலும் படிக்க...

  ஜியோவில் 9,093 கோடி முதலீடு செய்கிறது அபுதாபி நிதி நிறுவனம் முபாதலா: 6 வாரங்களில் 6-வது பெரிய டீல்

   


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: