Home /News /business /

அமேசான் குடியரசு தின விற்பனை: மிஸ் பண்ணவே முடியாத 6 மொபைல் ஆபர்கள்!

அமேசான் குடியரசு தின விற்பனை: மிஸ் பண்ணவே முடியாத 6 மொபைல் ஆபர்கள்!

மிஸ் பண்ணவே முடியாத 6 மொபைல் ஆபர்கள்!

மிஸ் பண்ணவே முடியாத 6 மொபைல் ஆபர்கள்!

அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கான விற்பனையானது ஜனவரி 16 முதலே தொடங்கியது, அதே நேரத்தில் ப்ரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 17 முதல் இந்த சிறப்பு விற்பனை அணுக கிடைக்கிறது. 

இ-காமர்ஸ் தளமான அமேசான், அதன் 2022 ஆம் ஆண்டுக்கான கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையின் கீழ் 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கான விற்பனையானது ஜனவரி 16 முதலே தொடங்கியது, அதே நேரத்தில் ப்ரைம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 17 முதல் இந்த சிறப்பு விற்பனை அணுக கிடைக்கிறது.

இந்த குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமேசானின் அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிடுகிறது. இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அமேசான் கூப்பன் மற்றும் இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் போன்ற சலுகைகளையும் பெறலாம். வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.1,750 வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.

ஒருவேளை இந்த விற்பனையின் போது நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 6 ஸ்மார்ட்போன் ஆபர்களின் லிஸ்ட் இதோ!

ஐபோன் 12:  ஆப்பிளின் இந்த 2020 பிளாக்ஷிப் மாடலானது, நிகழும் அமேசான் குடியரசு தின விற்பனையின் போது சலுகை விலையில் வாங்க கிடைக்கும். அதாவது 64GB வேரியண்ட் ஆனது ரூ.53,699 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மறுகையில் உள்ள 128GB மற்றும் 256GB மாடல்கள் முறையே ரூ.61,999 மற்றும் ரூ.75,999க்கு வாங்க கிடைக்கின்றன. பிரதான அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 5G சப்போர்ட், 6.1 இன்ச் அளவிலான ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் மெக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவைகளை பேக் செய்கிறது.

ALSO READ |  உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடித்து லாக் செய்து, தரவுகளை நீக்குவது எப்படி?

ஒன்பிளஸ் 9ஆர்: எஸ்டி 870 கொண்டு இயங்கும் 9ஆர் மாடல், இந்தியாவில் 9ஆர்டி மாடல் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு விலைக் குறைப்பைப் பெறுகிறது. அமேசான் குடியரசு தின விற்பனை 2022-யின் போது 9ஆர் மாடலானது ரூ.36,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதன் விலையை ரூ.33,999 ஆகவும் குறைக்கலாம். பிரதான அம்சங்களை பொறுத்தவரை, இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங், க்வாட் ரியர் கேமரா அமைப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55 இன்ச் ஃப்ளூயிட் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ALSO READ |  உலகின் மிக மெலிதான ஃபோல்டபுல் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்த Honor - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

சியோமி 11 லைட் என்இ 5 ஜி: ஸ்னாப்டிராகன் 778 SoC உடன் வரும் இந்த போன் அமேசான் குடியரசு தின விற்பனையின் போது ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ரூ.1,000 மதிப்புள்ள அமேசான் கூப்பனையும் பயன்படுத்தலாம், ஆக விலையை ரூ.25,999 ஆக குறைக்கலாம். இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 6.81 மிமீ மெல்லிய வடிவமைப்பு மற்றும் 4,250mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி: இந்த ஸ்மார்ட்போன் நிகழும் அமேசான் விற்பனையின் போது மிகப்பெரிய விலைக் குறைப்பைப் பெறுகிறது. இது தற்போது ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பேஸிக் 6ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.21,999 க்கு வாங்கலாம். இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, பெரிய 6.7 எஸ்அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ALSO READ |  ஜிமெயில் டிப்ஸ்: கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் வழியாக ரகசியமாக இமெயில் அனுப்புவது எப்படி?

நோக்கியா ஜி20: நீங்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களானால், அமேசான் குடியரசு தின விற்பனையில் நோக்கியா ஜி20-யின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மாடல் ரூ.12,490 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. உடன் 1600×720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.5-இன்ச் எச்டி+ டிஸ்பிளே மற்றும் பெரிய 5,050mAh பேட்டரி போன்றவைகளை பேக் செய்கிறது.\

ரியல்மி நார்சோ 50ஏ: பட்டியலில் உள்ள மற்றொரு பட்ஜெட் போன். இது ரூ.9,449 க்கு விற்பனை செய்யப்படுகிறது (எஸ்பிஐ சலுகை உட்பட). அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 ஆக்டா கோர் சிப்செட், 4ஜிபி ரேம், 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 6000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Amazon, Republic day

அடுத்த செய்தி