• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பிளிப்கார்ட், அமேசான் அள்ளிக்கொடுக்கும் ஆஃபர்கள்... உங்கள் லேப்டாப் ஆசையை நிறைவேற்ற சரியான தருணம்

பிளிப்கார்ட், அமேசான் அள்ளிக்கொடுக்கும் ஆஃபர்கள்... உங்கள் லேப்டாப் ஆசையை நிறைவேற்ற சரியான தருணம்

பிளிப்கார்ட், அமேசான் அள்ளிக்கொடுக்கும் ஆஃபர்கள்

பிளிப்கார்ட், அமேசான் அள்ளிக்கொடுக்கும் ஆஃபர்கள்

பிளிப்கார்டில் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும், அமேசானில் ஹெச்.டி.எப்.சி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1750 முதல் ரூ.10,750 வரை கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

  • Share this:
லேப்டாப் வாங்குவதற்கு சரியான நேரத்தை தேடிக்கொண்டிருந்தீர்கள் என்றால், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை விட, சிறந்த இடம் இருக்காது. லேப்டாப் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் தள்ளுபடி கிடைக்கிறது. பிளிப்கார்டில் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும், அமேசானில் ஹெச்.டி.எப்.சி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1750 முதல் ரூ.10,750 வரை கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
.
Chromebook-களில் பெஸ்ட் டீல்

ஆசஸ் நிறுவனம் சி சீரிஸ் Chromebook லேப்டாப்களுக்கு சிறந்த தள்ளுபடியை கொடுக்கிறது. அந்த நிறுவனத்தின் Chromebook C214, C223, C423 மற்றும் C523 ஆகியவை Flipkart -ல் ரூ.2,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. HP Chromebook MT8183 லேப்டாப் Flipkart -ல் ரூ.21,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. லெனோவா ஐடியாபேட் 3 மற்றும் ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 3 குரோம் புக்ஸ், முறையே ரூ.18,990 மற்றும்
ரூ.28,990-க்கு கிடைக்கின்றன.

ரூ.40,000 கீழ் பெஸ்ட் டீல் லேப்டாப் :

அமேசானில் டெல் இன்ஸ்பிரான் 15 (2021) லேப்டாப், MS Word, Excel, PowerPoint, போன்ற பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த லேப்டாப். பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய இந்த லேப்டாப் ரூ.36,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. HP 15s லேப்டாப்கள் 35,499 ரூபாய் முதல் கிடைக்கிறது. Asus VivoBook 14 (2021) மாடல் 35,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Inspiron 15 (2021 மாடல் 36,240 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Also Read : நீங்களும் இனி சொந்த வீட்டுக்காரர் ஆகலாம்.. கைக்கொடுக்கும் வங்கிகள்!

பிளிப்கார்ட்டில் HP 15s 11th Gen Intel மாடல் 40,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. Acer Aspire 3 லேப்டாப் ரூ. 35,990-க்கும், 38,990 ரூபாய்க்கு Dell Vostro-வும் சிறந்த விலையில் கிடைக்கிறது. Acer Aspire 5 மாடல் லேப்டாப் 39,490 ரூபாயில் இருந்து விற்பனையாகி வருகிறது. Aspire 7, AMD Ryzen 5 5500U CPU உடன் 54,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.60,000 கீழ் பெஸ்ட் டீல் லேப்டாப் :

The Dell Vostro 3400 லேப்டாப் 50,740 ரூபாய் விலையில் அமேசானில் விற்பனையாகிறது. Asus’ Xiaomi, எம்.ஐ ஹாரிசன் பதிப்பு 14, 53,990 ரூபாய்க்கு கிடைக்கும். The Asus VivoBook 14 (2021) மாடல் 51,740 ரூபாய்க்கும், லெனோவா ஐடியாபேட் ஸிலிம் 5, 58740 ரூபாய்க்கும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் VivoBook K15 OLED (2021) மாடல் 57,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. The Realme புக் ஸ்லிம் லேப்டார்கள் சிறப்புத் தள்ளுப்படி விலையில் 52,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. The MSI Modern 14 லேப்டாப் 52,990 ரூபாய்க்கு கிடைக்கும் ரெட்மி புக் புரோ (RedmiBook Pro) ரூ. 47,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.75,000 கீழ் பெஸ்ட் டீல்ஸ் :

The HP Pavilion (2021), ரூ.73,990 விலையில் அமேசானில் கிடைக்கிறது. Asus VivoBook S S15 (2021), 66,490 ரூபாய்க்கும், Lenovo ஐடியாபேட் ஸ்லிம் 5 (Ryzen 7 5700U) மாடல் 61,990 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. The Fujitsu UH-X லேப்டாப் சூப்பரான ப்ரீமியம் லேப்டாப் ஆகும். இது ரூ. 69,490-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லெனோவா ThinkPad E15 (2021), 71,990 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரூ.70,000 கீழ் பெஸ்ட் கேமிங் லேப்டாப் :

The MSI Bravo AMD Ryzen 5 5600U CPU லேப்டாப் 64,990 ரூபாய்க்கு பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. Acer Nitro 5 லேப்டாப் 69,990 விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: