அமேசான் சி.இ.ஓ. பதவியில் இருந்து ஜெஃப் பிஸோஸ் இன்று விலகவுள்ளார். இதையடுத்து அவரது எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்கள் வட்டமடிக்க தொடங்கியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் பிஸோஸ். உலகின் பணக்காரர் தரவரிசையில் ஜெஃப் பிஸோஸுக்கு என்று தனி இடம் உண்டு. அதற்கு காரணம் அவரது வர்த்தக சாம்ராஜ்ஜியமான அமேசான். 1994ம் ஆண்டின் பிற்பகுதியில் அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெஃப், தொடக்கத்தில் ஆன்லைனில் புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்து வந்துள்ளார். தற்போது அதனை உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக நிறுவியுள்ளார். வணிகம் என்பதை தாண்டி, விண்வெளி ஆராய்ச்சி, ஓடிடி தளம் என அமேசான் விரிவடைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகுவதாக ஜெஃப் அறிவித்தார். அதன்படி, இன்று அவர் பதவி விலகவுள்ளார். புதிய சி.இ.ஓ.வாக ஆண்டி ஜெஸ்ஸி தேர்வுசெய்யப்படவுள்ளார்.
அடுத்தது என்ன
மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் ஜெஃப் என்ன செய்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகினாலும் அவர் முழுமையாக ஓய்வு பெறப்போவதில்லை. நிர்வாக தலைவராக தொடர்வார். அதேபோல், 57 வயதாகும் ஜெஃப் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதை அவரது சமூக ஊடக பதிவுகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க: ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு: பிரான்ஸின் நடவடிக்கையால் மத்திய அரசுக்கு நெருக்கடி!
வான் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையே ஜெஃப், தனது சகோதரர் மார்க் உடன் வான்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற திட்டத்தை வைத்துள்ளார். இதேபோல், தனது முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், நிர்வாகத் தலைவராக தனது கவனத்தை புதிய முயற்சிகளுக்கு மாற்றுவதாகவும், அமேசானை வேலை செய்ய சிறந்த இடமாக மாற்றுவதை நோக்கி நகர்த்த போவதாக ஜெஃப் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றங்களை சமாளிப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் அவரது நிறுவனத்தில் கவனம் செலுத்தவும் ஜெஃப் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள்!
இதேபோல், தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழை கடந்த 2013ம் ஆண்டு 250 மில்லியன் டாலருக்கு ஜெஃப் வாங்கினார். தற்போது இந்த நாளிதழிலின் பணிகளிலும் அவர் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.