அமேசான், ஃப்ளிப்கார்ட் விழாக்கால விற்பனை- 1.4 லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு

எலெக்ட்ரிக் பொருட்களைக் கையாள்வது முதல் அனைத்து விதமான பயிற்சிகளும் தற்காலிகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமேசான், ஃப்ளிப்கார்ட் விழாக்கால விற்பனை- 1.4 லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு
அமேசான்
  • News18
  • Last Updated: September 24, 2019, 9:10 PM IST
  • Share this:
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்களில் இம்மாத இறுதியில் விழாக்கால சிறப்பு விற்பனை தொடங்குகிறது.

சிறப்பு விற்பனைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கான சேவையில் குறை இருக்கக்கூடாது என்ற காரணத்துக்காக பணியாளர்களை அதிகப்படுத்தியுள்ளனர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள். ஆர்டர் எடுக்கும் நிலையங்கள், வரிசைப்படுத்தல் மையங்கள், டெலிவரி மையங்கள், துணை நெட்வொர்க் பணிகள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என அத்தனைப் பிரிவுகளின் கீழ் சுமார் 90 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு அளித்துள்ளது அமேசான்.

இதேபோல், வால்மார்ட்-க்குச் சொந்தமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விழாக்கால விற்பனையை சமாளிக்க சுமார் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணையை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகப்படியான விற்பனை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தற்காலிக பணியாளர்களை 30 சதவிகிதம் கூடுதலாகவே இந்நிறுவனங்கள் நியமித்துள்ளன.


அமேசான் நிறுவனம் மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதபாத், பூனே ஆகிய நகரங்களில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் சேவை மையம் தொடர்புக்கு ஈமெயில், போன் அழைப்புகள், சமூக வலைதளம், சாட்டிங் என எந்தத் தளம் மூலமாகவும் சந்தேகங்களையும் புகார்களையும் தெரிவிக்க முடியும். தொலைபேசி அழைப்புகள் மூலம் சேவை மையத்தை அழைக்க தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பேசலாம். இதற்கான தற்காலிகப் பணியாளர்கள் நியமனமும் நடைபெற்றுள்ளது.

750 நகரங்களில் 1,400 டெலிவரி குடோன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் பொருட்களைக் கையாள்வது முதல் அனைத்து விதமான பயிற்சிகளும் தற்காலிகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: காலநிலை போராட்டத்துக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டம் - கூகுள், அமேசான் ஊழியர்கள் பங்கெடுப்பு!சாதாரண கடைகளில் விற்கும் சன் கிளாஸ் வாங்கி அணியலாமா ?
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்