அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆஃபரில் பொருள் வாங்குபவரா நீங்கள்... கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

வீட்டில் ஒரு பொருள் இருந்தாலும், அதை மீண்டும் வாங்க வைப்பது தான் இந்த வியாபார நுணுக்கம். அதற்கு இவர்கள் கையாளும் முறை காம்போ ஆஃபர்.

அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆஃபரில் பொருள் வாங்குபவரா நீங்கள்... கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 3, 2019, 2:14 PM IST
  • Share this:
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பொருள், தள்ளுபடி போக 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு MIND GAME என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தள்ளுபடியை அறிவிக்கும் போது, விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தங்களுக்குத் தேவையில்லாத புதிய பொருட்களையும் மக்கள் வாங்குவார்கள்.

அதன் பின்னர், எந்த ஒரு பொருளை வாங்க நினைத்தாலும், முதலில் அமேசான் அல்லது பிளிப்கார்டில் விலையை பார்த்து விட்டு தான் வாங்குவார்கள். உண்மையில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவற்றில் வாங்க நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். தங்களது வாடிக்கையாளர்கள் வட்டத்தை அதிகரிக்கவே இந்த வகையான தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக அந்நிறுவனங்கள் செய்யும் செலவுதான் இதுபோன்ற தள்ளுபடி அறிவிப்புகள். இதனை cash burn என்கிறார்கள் வல்லுநர்கள்.


அதாவது ஒரு நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்காக செய்யும் செலவு. இதனுடன் வங்கிகளும் சேர்ந்து கொண்டு NO COST EMI போன்ற சலுகைகளை வழங்குகின்றன. பொதுவாக எந்த வங்கியும் வட்டி இல்லாமல் கடன் கொடுக்காது. அப்படி இருக்க NO COST EMI என்பது, அந்த பொருளின் விலையில் வங்கிக்கான கட்டணமும் மறைமுகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, கமிஷன் தொகையை வங்கிகள் பெற்றுக் கொள்ளும்.

சலுகையில் வாங்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை செல்போன், டிவி போன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள்தான். இப்படி ஆன்லைன் விற்பனையில் வாங்கும் போது, அனைவரும் கவனிக்கும் பொதுவான விஷயங்களைத் தாண்டி, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு ஆதாயம் இல்லாமல் கடன் கொடுக்காது.

அமேசான், பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில், NO COST EMIல் கடன் வாங்கினாலும், முழு தொகையை கொடுத்தாலும் ஒரே விலை தான். முழு பணத்தையும் கொடுத்து வாங்குபவர்கள், ஒருமுறை கடைகளில் விசாரித்து விட்டு வாங்குவது சிறந்தது. பேரம் பேசினால் கடைகளில் விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறதுஉதாரணமாக, 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு டிவியை, NO COST EMIல் வாங்கினால், அதில் வங்கிகளுக்கான கட்டணங்களும் அடங்கும். முழு தொகையும் கொடுத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லைன் விற்பனையில் வாங்குவதை விட, கடைகளில் சென்று பேரம் பேசினால் 35 ஆயிரத்திற்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

அமேசான், பிளிப்கார்டில் வாங்கும் போது நம்மை ஈர்க்கும் மற்றொரு விஷயம் கேஷ் பேக் (cash back). 10 சதவிதம் என்று பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும், உள்ளே சென்று பார்த்தால், 10 சதவித கேஷ் பேக் (cash back)-ல் அதிகபட்சம் 1000 ரூபாய் தான் கிடைக்கும் என்று இருக்கும். 30 ஆயிரம் ரூபாய் செல்போன் வாங்கினால், வங்கிகளை பொறுத்து அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் தான் கேஷ் பேக் (cash back) கிடைக்கும்.

ஒரு சில நேரங்களில் 10000 ரூபாய் வரை கூட கேஷ் பேக் (cash back) அறிவிப்புகள் வரும். ஆனால் அவை உடனடியாக வழங்கப்படாது. ஒவ்வொரு மாதமும் உங்கள் கார்டில் பாயிண்ட் ஆக வரவு வைக்கப்பட்டு, பின்னர் அதை பணமாக மாற்றிக்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட சேவை, தள்ளுபடி விலையில் கிடைக்கும் போது அதற்கு subscribe செய்தால், auto renewal என்பதை தேர்வு செய்திருக்கிறீர்களா என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். auto renewal தேர்வு செய்யப்பட்டிருந்தால், ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட தேதியில் அந்த சேவைக்கு பணம் எடுக்கப்பட்டு விடும். auto renewalஐ தேர்வு செய்திருந்தால், உங்கள் டெபிட், கிரடிட் கார்டுகளில் இருந்து பணம் எடுக்க எந்த பாஸ்வேர்டும் தேவையில்லை.

வீட்டில் ஒரு பொருள் இருந்தாலும், அதை மீண்டும் வாங்க வைப்பது தான் இந்த வியாபார நுணுக்கம். அதற்கு இவர்கள் கையாளும் முறை காம்போ ஆஃபர். அதில் கிடைக்கும் பொருளின் தரம் எப்படி இருக்கிறது என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

வாங்கும் பொருள் சரியாக இல்லை என்றால் திரும்ப அனுப்பும் வசதி இருக்கிறதா என்பது குறித்து கவனிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் திரும்ப அனுப்ப வேண்டும் என்று REQUEST கொடுத்தாலும், அதற்கு சரியான பதில் கிடைக்காமல் போகும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

வீடியோ பார்க்க: வருமான வரித்துறையில் வேலை என்று ரூ.60 லட்சம் மோசடி!

First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading