அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அந்நிறுவனத்தில் பணிநீக்கங்கள் வரவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பலர் உட்பட 18000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கங்களால் பாதிக்கப்படுவார்கள் என்று ஜாஸ்ஸி அறிவித்துள்ளார்.
தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் இன்னும் சில துறைகள் உட்பட பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 1000 ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்யக்கூடும் என்று கடந்தகால அறிக்கைகள் சுட்டிக்காட்டின. இந்தியா உட்பட உலகளவில் பல ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. மேலும், ஜனவரி 18-க்குப் பிறகு பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் நிறுவனம் தொடர்பு கொள்ளும் என்பதை ஜாஸ்ஸி உறுதிப்படுத்தி உள்ளார்.
அமேசானில் பணிநீக்கங்கள் தொடங்கும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் லிங்க்ட்இன் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருப்பதாகவும் பகிர்ந்து கொண்டனர். பெங்களூரு, குருகிராம் மற்றும் பிற இடங்களில் உள்ள அலுவலகங்கள் முழுவதும் இந்தியாவில் இருந்து செயல்படும் பல துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அடங்கி உள்ளனர்.
குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அமேசான் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. மேலும், இதே மின்னஞ்சலில், 5 மாத ஊதியத்தை வழங்குவதாகவும் உறுதியளித்து உள்ளது. சில வாரங்களுக்கு இந்த பணிநீக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வார வலைப்பதிவில், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி தொற்றுநோய்களின் போது நிறுவனம் அதிக ஊழியர்களை பணியமர்த்தியதாகவும், எனவே வரும் வாரங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் கடந்த பல ஆண்டுகளாக பல ஊழியர்கள் விரைவாக பணியமர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு மதிப்பாய்வு மிகவும் கடினமாக உள்ளது" என்று அமேசான் நிறுவனத்தின் சிஇஓ குறிப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்து இன்னும் சிலவற்றை குறிப்பிட்டார். "நாங்கள் 18,000 ஊழியர்களை அகற்ற திட்டமிட்டுள்ளோம். இதனால் பல அணிகள் பாதிக்கப்படுகின்றன; இருப்பினும், பெரும்பாலான பங்கு நீக்குதல்கள் எங்கள் அமேசான் ஸ்டோர்ஸ் மற்றும் PXT நிறுவனங்களில் உள்ளன" என்று ஜாஸ்ஸி தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணமாக, சுகாதார நலன்கள் மற்றும் பிற தேவைக்கான ஆதரவை வழங்குவதாக ஜாஸ்ஸி உறுதியளித்துள்ளார். "இந்த அளவிற்கு ஊழியர்களை நீக்குவது என்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை ஆழமாக நாங்கள் அறிவோம், மேலும் இந்த முடிவுகளை நாங்கள் இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டோம் அல்லது இவை பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கலாம் என்பதை நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம்” என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Also Read : 500 ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கிய ஷேர்சாட் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்
அமேசான் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பல இந்திய ஊழியர்கள், லிங்க்ட்இன் மற்றும் ட்விட்டரில் தங்களுக்கான வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். மெட்டா நிறுவனத்தில் சமீபத்தில் முழுநேர ஆஃபர்களைத் திரும்பப் பெறுவதை அந்நிறுவனம் உறுதிசெய்தது. மேலும் 2023ஆம் ஆண்டுக்கான பணியமர்த்தலை தாமதமாக்குவதையும் சுட்டி காட்டியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amazon, Job, Job search