தொடங்கியது அமேசான் ஃபோன் திருவிழா... சலுகைகள் என்னென்ன?

ஒன்ப்ளஸ் 6T

ஒன்பிளஸ் 6T, ரியல்மீ U1, ஐஃபோன் X, ஹானர் வீயூவ் 20 உள்ளிட்ட ஸ்மார்ட்ஃபோன் மாடல்களுக்கும் அமேசான் கவர்ச்சிகரமான சலுகையை அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமேசான் இந்தியா வழங்கும் ‘Fab Phones Fest’ விற்பனை வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்கள் ஃபோன் திருவிழாவில் பல பிரபல ஸ்மார்ட்ஃபோன்கள் சலுகை விலையில் விற்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் மிகச்சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களையும் அமேசான்  வழங்குகிறது.

இதுவரையில் வழங்கப்படாத அளவில் மிகவும் அதிகமான தள்ளுபடி விலையில் இம்முறை ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் இருக்கும் என அமேசான் அறிவித்துள்ளது.

தற்போது சந்தை விலையில் ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்ஃபோன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 37,999 ரூபாய்க்கும் 8ஜிபி ரேம், 12 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 41,999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதுவே 256 ஜிபி ஸ்டோரேஜ் என்றால் 45,999 ரூபாய். சமீபத்தில்தான் ஒன்ப்ளஸ் 6T மெக்லெரன் லிமிடெட் எடிஷன் 10ஜிபி ரேம் கொண்டு 50,999 ரூபாய்க்கு வெளியானது.

மேலும், அமேசானில் இம்முறை ஆப்பிள் ஃபோன்களுக்கும் சிறந்த ஆஃபர் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. விலை குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும் வட்டியில்லா தவணை முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானின் இந்த ஃபோன் திருவிழா விற்பனையில் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்யும்போது கூடுதலாக 10 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 6T, ரியல்மீ U1, ஐஃபோன் X, ஹானர் வீயூவ் 20 உள்ளிட்ட ஸ்மார்ட்ஃபோன் மாடல்களுக்கும் அமேசான் கவர்ச்சிகரமான சலுகையை அறிவித்துள்ளது.

மொபைல்களுக்கு மட்டுமல்லாது ஃபோன் கேஸ், ஹெட்ஃபோன்கள், சார்ஜர்கள், பவர் பேங்க் ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published: