ஆர்டர்களை துரிதமாக டெலிவரி செய்வதற்காக முதல்முறையாக சொந்தமாக விமானங்கள் வாங்கும் அமேசான்

ஆர்டர்களை துரிதமாக டெலிவரி செய்வதற்காக முதல்முறையாக சொந்தமாக விமானங்கள் வாங்கும் அமேசான்

சொந்தமாக 11 விமானங்கள் வாங்கப்படுவதையடுத்து அமேசானின் விமானங்கள் எண்ணிக்கை 85 ஆக உயர இருக்கிறது.

சொந்தமாக 11 விமானங்கள் வாங்கப்படுவதையடுத்து அமேசானின் விமானங்கள் எண்ணிக்கை 85 ஆக உயர இருக்கிறது.

 • Share this:
  ஆன்லைன் வர்த்தகத்தில் உலகில் கொடி கட்டி பறந்து வருகிறது அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம், கொரோனா பரவலுக்கு பின்னர் பெரும்பாலும் ஆன்லைன் தளங்கள் மூலம் பொருட்கள் வாங்கும்  போக்கு மக்களிடையே அதிகரித்ததையடுத்து,  மலை போல் ஆர்டர்கள் குவிந்து வருவதை தொடர்ந்து அதனை கையாளும் வகையில் லட்சக்கணக்கானவர்களை புதிதாக அமேசான் பணியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

  இந்நிலையில் உலகளாவிய சப்ளையை விரைவாக மேற்கொள்ளும் வகையில் முதல் முறையாக சொந்தமாக விமானங்கள் வாங்க அமேசான் முடிவெடுத்தது.  வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா நிறுவனங்களிடமிருந்து 767-300 ரக ஜெட் விமானங்கள் 11ஐ வாக்க அமேசான் ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் வெஸ்ட்ஜெட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் 4 விமானங்கள் இந்த ஆண்டே அமேசானில் இணைய உள்ளது. பயணிகள் விமானங்களை கார்கோ விமானங்களாக மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

  டெல்டா நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் 7 விமானங்கள் அடுத்த ஆண்டே டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக கார்கோ சேவைக்காக விமானங்களை லீசுக்கு எடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சொந்தமாகவே வாங்குகிறது அந்நிறுவனம்.

  சொந்தமாக 11 விமானங்கள் வாங்கப்படுவதையடுத்து அமேசானின் விமானங்கள் எண்ணிக்கை 85 ஆக உயர இருக்கிறது. மேலும் இந்த விமானங்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்ற தகவலை வெளியிட அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அமேசான் குளோபல் ஏர் நிறுவனத்தின் துணைத் தலைவர் சாரா ரோட்ஸ் கூறுகையில்,
  வாடிக்கையாளர்கள் தற்போது பொருட்கள் விரைவாக கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர், அவர்களுக்கு காலதாமதமாக டெலிவரி செய்வதை தவிர்க்கும் வகையில் தற்போது இந்த புதிய விமானங்கள் வாங்கப்படுகின்றன என்றார்.

  மேலும் சொந்த விமானங்கள் மற்றும் வாடகை விமானங்கள் என கலவையாக எங்களிடம் இருப்பது எங்களின் இயங்கத்தை சுமூகமாக நகர்த்திச் செல்ல உதவும் என கூறினார்.
  Published by:Arun
  First published: