ஊரடங்கிலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்க்கும் டெலிவரிபாய்ஸ்.. Amazon, BigBasket, Grofers, MedLife பாராட்டு

இக்கட்டான துயரம் மிகுந்த காலத்தில் இவர்களின் அயராத தன்னலமற்ற முயற்சிக்கு நாம் தலைவணங்க வேண்டும்.

ஊரடங்கிலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்க்கும் டெலிவரிபாய்ஸ்.. Amazon, BigBasket, Grofers, MedLife பாராட்டு
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு சூழ்நிலையில் துணிச்சலாக பணிபுரியும் டெலிவரி ஏஜென்டுகளை Amazon, BigBasket, Grofers மற்றும் MedLife நிறுவனங்கள் பாராட்டி உள்ளன.

ஊரடங்கு காலத்தில் வாராந்திர மளிகைப் பொருட்கள் மற்றும் மாதாந்திர மருத்துவ பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. 21- நாள் முடக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்கள் மன அழுத்தத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

ஆனால் முதுமை, நோய் அல்லது குழந்தை பராமரிப்பு அல்லது குறைபாடு ஆகியவற்றின் காரணமாக கடைக்கு வர இயலாதவர்களின் நிலை என்ன? நம்மில் பெரும்பாலானோர் தனித்திருப்பதற்கும் சமூக விலகலை கடைபிடிப்பதற்கும் ஏராளமான காரணங்கள் உள்ளன.


இருப்பினும், நம் அனைவருக்கும் உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் தினமும் தேவைப்படுகின்றன. இதை சாத்தியமாக்க, ஆயிரக்கணக்கான துணிச்சல் மிக்க டெலிவரி ஏஜென்டுகள் நமது தினசரி தேவைகளை சரியான நேரத்தில் நமக்கு வழங்குகின்றனர். இந்த இக்கட்டான துயரம் மிகுந்த காலத்தில் இவர்களின் அயராத தன்னலமற்ற முயற்சிக்கு நாம் தலைவணங்க வேண்டும்.

இத்தகைய சேவைகளுக்குப் பின்னால் உள்ள நபர்களை பாராட்டும் வகையில், Amazon, BigBasket, Grofers மற்றும் MedLife ஆகிய நிறுவனங்கள் ஒரு காணொளியை வழங்குகின்றனர். இது உதவும் கரங்களின் இந்த நெட்வொர்க் இந்த நாட்டின் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சேவை வழங்க அவர்களுக்கு நன்றி கூறுவதை நினைவூட்டுகிறது.

#HumSabEkSaath என்பதை எடுத்துரைப்பதன் மூலம், நம்மை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அவர்கள் நினைவூட்டுகிறார்கள். கைகோர்த்து, ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைப்பதன் மூலம், சுத்தமான பொருட்கள், உயிர்-காக்கும் மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று ஏற்கனவே கவலையில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்கிறார்கள்.சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த காணொளி தேசத்தின் இதயத் துடிப்பை தூண்டியது. ஏன்? ஏனெனில், இறுதியில் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் மற்றும் மிகவும் தேவைப்பட்ட நிலையில் நமக்கு உதவிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும்.

#TogetherForIndia காணொளி

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading