பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கலாம் - ஆர்.பி.ஐ அனுமதி

வங்கிகளின் பங்குதாரர்கள் அதிகபட்சமாக 15 விழுக்காடு வரை பங்குகள் வைத்திருக்கலாம் என்பதை அடுத்த 15 ஆண்டுகளில் 26 விழுக்காடாக உயர்த்த அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரையளிக்கப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கலாம் - ஆர்.பி.ஐ அனுமதி
ரிசர்வ் வங்கி
  • Share this:
பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.

தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. அதில், புதிதாக வங்கி தொடங்க உரிமம் பெற வேண்டுமெனில் குறைந்தபட்ச முதலீடு தற்போதுள்ள 500 கோடி ரூபாயில் இருந்து ஆயிரம் கோடியாகவும்,

சிறு நிதி வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு 200 கோடியில் இருந்து 300 கோடியாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடி மற்றும் அதற்கு அதிகமான சொத்து மதிப்பு கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டிருந்தால், அவற்றை வங்கியாக மாற்ற பரிசீலிக்கலாம்.


பேமெண்ட் வங்கிகள் மூன்றாண்டுகள் வரை சிறப்பாக இயங்கி வந்தால், அதனையும் சிறு நிதி வங்கியாக மாற்றலாம். வங்கிகளின் பங்குதாரர்கள் அதிகபட்சமாக 15 விழுக்காடு வரை பங்குகள் வைத்திருக்கலாம் என்பதை அடுத்த 15 ஆண்டுகளில் 26 விழுக்காடாக உயர்த்த அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்த பிறகு பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு கூறியுள்ளது. இந்த பரிந்துரையின்படி வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால், டாடா கேபிட்டல், ஆதித்யா பிர்லா பைனான்ஸ், எல் அண்டு டி பைனான்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கி சேவையை தொடங்க முடியும் என கூறப்படுகிறது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading