Home /News /business /

உர்ஜித் படேல் ராஜிநாமாவும் போராட்டத்தின் எதிர்ப்புதான்: ரகுராம் ராஜன்

உர்ஜித் படேல் ராஜிநாமாவும் போராட்டத்தின் எதிர்ப்புதான்: ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்.

ரகுராம் ராஜன்.

2016-ம் ஆண்டு ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் வெளியேறிய பிறகு அந்தப் பதவிக்கு வந்தவர் தான் உர்ஜித் படேல்.

  • News18
  • Last Updated :
    ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் திங்கட்கிழமை ராஜிநாமா செய்தது குறித்துத் தனியார் தொலைக்காட்சி சேனால் ஒன்றுக்கு ரகுராம் ராஜன் தொலைப்பேசி மூலம் பேட்டி அளித்தார்.

    உர்ஜித் படேல் ராஜிநாமா குறித்துக் கருத்து கேட்ட போது அதற்குப் பதில் அளித்த முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியர்கள் இதற்கு வருத்தப்பட வேண்டும். அரசு அதிகாரி ஒருவர் ராஜிநாமா செய்கிறார் என்றால் அதுவும் ஒரு விதமான போராட்டத்தின் எதிர்ப்பே என்று கூறினார்.

    2016-ம் ஆண்டு ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் வெளியேறிய பிறகு அந்தப் பதவிக்கு வந்தவர் தான் உர்ஜித் படேல்.

    Urjit Patel resigns as RBI governor
    ஆர்.பி.ஐ. ஆளுநர்
    உர்ஜித் படேல்.


    உர்ஜித் படேல் ஆர்பிஐ கவர்னராகப் பதவி ஏற்ற 2 மாதத்தில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. அப்போது இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். ரிலையன்ஸூக்காகத் தான் இவருக்குக் கவர்னர் பதவி அளிக்கப்பட்டது, பண மதிப்பு நீக்க நடவடிக்கை செய்யப்பட்டது என்று எல்லாம் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

    ஆனால் சுயாட்சி அதிகாரம் கொண்ட ஆர்பிஐ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு உள்ளதற்கு எதிராகப் போராடி வெற்றிபெற்ற சில மாதங்களில் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்துள்ளார்.

    மேலும் பார்க்க: சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் சத்யராஜ்
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Raghuram Rajan, RBI, Urjit Patel

    அடுத்த செய்தி