Home /News /business /

தங்க நகைகளுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்.. மத்திய அரசு அறிவிப்பு

தங்க நகைகளுக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்.. மத்திய அரசு அறிவிப்பு

தங்கம்

தங்கம்

வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகா்வோர் விவகார செயலா் லீனா நந்தன், "திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி தற்போது கோரிக்கைகள் எதுவும் எழவில்லை" என்றார்.

    மேலும், "இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் அமைப்பு ஏற்கனவே முழு உத்வேகத்துடன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும்.  கட்டாய ஹால்மார்க்கிங் மூலம், குறைந்த தரத்திலான தங்க விற்பனையை நிறுத்துவதோடு, நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க முடியும்" எனவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க.... ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தவர்களிடம் ரூ.300 கோடி அபராதம் வசூலித்த SBI

    .



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Gold

    அடுத்த செய்தி