Home /News /business /

10,000 பழைய ஊழியர்களுக்கு குட்பாய்... பிரெஷ்ஷர்களை பணியமர்த்தும் அலிபாபா...

10,000 பழைய ஊழியர்களுக்கு குட்பாய்... பிரெஷ்ஷர்களை பணியமர்த்தும் அலிபாபா...

அலிபாபா

அலிபாபா

Alibaba : அலிபாபா நிறுவனத்தின் செயலால் 10,000 ஊழியர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அலிபாபா நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த 10,000 த்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்துள்ளது. சமீப காலமாக பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றது.

    இது ஒரு புறம் இருக்க  அலிபாபா நிறுவனம் குறித்து மார்னிங் போஸ்ட் ( South China Morning Post ) வெளியிட்டுள்ள தரவின் படி 13,616 பேரை ஜூன் காலாண்டில் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 2,45,700 பேர் பணி புரிவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல 2016க்கு பிறகு ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.

    சீன அரசாங்கம் இணையத்துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த அலிபாபா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு முதல், சீன ஒழுங்குமுறை அதிகாரிகள் (Chinese regulatory authorities), அலிபாபா மற்றும் ஆண்ட் குரூப் போன்ற உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை இணையத் துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த சீன அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகின்றது.

    ALSO READ | 1,59,062 பேரை பணியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது : இந்திய ரயில்வே துறை

    இதன் காரணமாக புதிய ஆட்களைபணியமர்த்த அலிபாபா நிறுவனம் நிறுவனம் முடிவு செய்து இதன் மூலம் நிறுவன வருவாயை ஈட்ட இந்த பணி நீக்கம் காரணம் என கூறப்படுகின்றது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Alibaba

    அடுத்த செய்தி