சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்தது. இந்நிலையில், அட்சய திருதியை நாளான இன்று, ஒருகிராம் தங்கம் 39 ரூபாய் குறைந்து 4,816 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி விலை இன்று மேலும் சரிவடைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அட்சய திருதியை ஒட்டி இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னையில் பல இடங்களில் காலை 6 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துள்ள காரணத்தால், இன்று விற்பனை அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து, மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் இன்றி ஆர்வமாகவே உள்ளனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம் இன்று. இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், ‘ஓம் ஐஸ்வரேஸ்வராய நம’ என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர். இந்த நாளில் தங்கம் வாங்குவது நற்பலனை தரும்.
Must Read : செவ்வாய் கிழமைகளில் வீடு துடைக்கக்கூடாதாம்... ஏன் தெரியுமா?
அதன்படி இன்று, காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.