அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் அமாவாசை தினத்தில் இருந்து 3ஆவது நாள் அட்சய திருதியை கொண்டாடப்படும். ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய இந்த நன்நாளில் வாங்கும் பொருட்கள் பன்மடங்காக பெருகும் என்பது ஐதீகம். இதன்படி, அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நகைக்கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
இதில், தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் கிலோ-வுக்கு மேலான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது 30 சதவிகிதம் கூடுதல் எனவும் தெரிவித்தார். இதற்கு, சிறப்பான முன்பதிவு ஏற்பாடுகளும் ஒரு காரணம் என ஜெயந்திலால் சலானி கூறினார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.