இன்று அட்சய திருதியை : ஆன்லைனில் தங்க நகை விற்பனை... வீடியோ கால் மூலம் மாடல்களை காண்பித்து புக்கிங்..!

Akshaya Tritiya 2020 | நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இன்று அட்சய திருதியை : ஆன்லைனில் தங்க நகை விற்பனை... வீடியோ கால் மூலம் மாடல்களை காண்பித்து புக்கிங்..!
கோப்புப் படம்
  • Share this:
ஊரடங்கால் நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அட்சய திருதியைக்கு நகை வாங்குபவர்கள் ஆன்லைனில் நகை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்றைய தினம் ஒரு கிராம் தங்க நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டு இருப்பதால், நகைகளை ஆன்லைன் மூலம் கடை உரிமையாளர்கள் விற்கத் தொடங்கி உள்ளனர்.

இதன் மூலம், நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தின் மதிப்பில் எவ்வளவு கிராம் தங்கம் வேண்டுமோ? பணத்தை செலுத்திவிட்டு, அந்த தங்கத்தை ஊரடங்கு முடிந்த பின்னர் பெற்றுக்கொள்ளலாம். தங்கத்திற்கு பணத்தை செலுத்திய பின், தங்கம் வாங்கியதற்கான சான்றிதழ் ஒன்று வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அக்‌ஷய திருதியை அன்று அனுப்பப்படும்.


ஒரு சில நிறுவனங்கள் வீடியோ கால் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நகையின் மாடல்களை காண்பித்து புக்கிங் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த ஆண்டு விற்பனை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

First published: April 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading