பொழுதுபோக்கு துறையில் அதிக வரி செலுத்துபவராக மீண்டும் அக்ஷய் குமார் மாறியுள்ளார். வருமான வரித்துறை அவருக்கு சம்மன் பத்ரா, கவுரவ சான்றிதழ் வழங்கியுள்ளது. அறிக்கைகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பட்டத்தை அக்ஷய் குமார் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
பருவநிலை இடர்கள் குறித்த ஆலோசனை அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிடும் - சக்திகாந்த தாஸ்!
சிறந்த வரி செலுத்துபவர் :
அக்ஷய் குமார் தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பில் இருப்பதால், அவர் சார்பாக வருமான வரித்துறையின் மரியாதை சான்றிதழை அவரது குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அக்ஷய் குமாருக்கான கவுரவ சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் அதிக வரி செலுத்துபவராக நடிகர் அக்ஷய்குமார் தொடர்ந்து இருந்து வருகிறார். இன்று அதிகபட்ச திரைப்படங்களைக் கையில் வைத்துள்ள அவர் அதிக சம்பள வருமானத்தையும் கொண்டுள்ளார். அந்த வருமானத்திற்கு சரியாக வரியும் செலுத்தி வருகிறார்.இதனால் இந்தியாவின் அதிக வரி செலுத்துவோர் பட்டியலில் அவர் இடம்பிடித்ததில் ஆச்சரியமில்லை.
அக்ஷய் குமார் தற்போது டினு தேசாய் ஜோடியாக இங்கிலாந்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் கடைசியாக மனுஷி சில்லருடன் சாம்ராட் பிருத்விராஜ் படத்தில் நடித்தார். ஆனால், கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு எதிர்பார்த்த அளவு கவரவில்லை. நடிகர் அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன், ராம் சேது மற்றும் செல்ஃபி உள்ளிட்ட பல படங்கள் வரும் மாதங்களில் வெளியீட்டுக்காக வரிசையில் உள்ளன. அவரது பைப்லைனில் ஓ மை காட் 2-ம் வரிசையில் உள்ளது. சமீபத்தில், சமந்தா ரூத் பிரபுவுடன் கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் சீசன் 7 இல் விருந்தினராக அக்ஷய் கலந்துகொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Akshay Kumar, Income tax