ஹோம் /நியூஸ் /வணிகம் /

டைம்ஸ் இதழின் உலகின் டாப் 100 வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் ஆகாஷ் அம்பானி!

டைம்ஸ் இதழின் உலகின் டாப் 100 வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் ஆகாஷ் அம்பானி!

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் இவர்தான்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஸரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்  முகேஷ் அம்பானியின் மகனும், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் தலைவருமான ஆகாஷ் அம்பானி, டைம் 100 நெக்ஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள உலகின் டாப் 100 வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் இவர்தான். இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வணிகத் தலைவரான அம்ரபாலி கானும் இந்தப் பட்டியலில் உள்ளார்.

"இந்திய தொழிலதிபர் ராயல்டியின் வாரிசான ஆகாஷ் அம்பானி, வணிகத்தில் உயருவார் என்று எப்போதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்காக தனது வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து வருகிறார்" என்று டைம்ஸ் இதழ் அவரைப் பற்றி பாராட்டியுள்ளது.

தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியில் 5G

ஆகாஷ் அம்பானிக்கு வெறும் 22 வயதில் அவருக்கு மேனேஜிங் போர்டு சீட் வழங்கப்பட்டது. தற்போது 30 வயதான ஜூனியர் அம்பானி, 426 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் தலைவராக ஜூன் மாதம் பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் இருந்து பல பில்லியன் டாலர் முதலீடுகளில் நிறுவனத்திற்குள் கொண்டு வர அவர் முக்கிய பங்கு வகித்தார்.

உலகின் டாப் 100 வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்:

வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், சுகாதாரம், அறிவியல் மற்றும் செயல்பாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 வளர்ந்து வரும் தலைவர்களை இந்தப் பட்டியல் எடுத்துக் காட்டுகிறது என்று டைம் தெரிவித்துள்ளது.

இந்தப்பட்டியலில் அமெரிக்க பாடகி SZA, நடிகை சிட்னி ஸ்வீனி, கூடைப்பந்து வீரர் ஜா மோரன்ட், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ், நடிகர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கேகே பால்மர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஃபர்விசா ஃபர்ஹான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் சுற்றளவை விட 27 மடங்கு அதிகம்.. ஜியோ ஃபைபர் ஆப்டிக்கின் நீளம் குறித்து கூறிய முகேஷ் அம்பானி

ஒன்லி ஃபேன்ஸின் அமராபாலி கான்:

முதன்மையாக ஆபாசப் படங்களைத் தயாரிக்கும் பாலியல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் தளமான ஒன்லி ஃபேன்ஸ் நிறுவனத்தில் அமராபாலி கான் என்பவர் செப்டம்பர் 2020 இல் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரியாகச் சேர்ந்தார்.

தற்போது அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். "அவரது தலைமையின் கீழ், ஒன்லி ஃபேன்ஸ் ஒரு பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையான மையத்தைத் தொடங்கியது, மேலும் தளத்தின் புகழ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது" என்று டைம் குறிப்பிட்டுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Aakash ambani, Time Magazine