முகப்பு /செய்தி /வணிகம் / Airtel, Vodafone-ல் அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் விரைவில் அறிமுகம்

Airtel, Vodafone-ல் அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் விரைவில் அறிமுகம்

airtel and vodafone

airtel and vodafone

TRAI | இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (டிராய் - TRAI) தனது மாதாந்திர ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் தொடர்பான புதிய உத்தரவுக்கு இணங்க, டெலிகாம் சேவை நிறுவனங்களுக்கு மேலும் 60 நாட்கள் அவகாசம் தந்துள்ளது.

  • Last Updated :

மன்த்லி ரீசார்ஜ் என்ற பெயரில் தற்போது ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 24 மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளன. காலண்டர் மாத முறையில் ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்ய கூடிய வகையில் குறைந்தபட்சம் ஒரு திட்டத்தையாவது கொண்டு வர டிராய் கடந்த ஜனவரி மாதம் தொலைத்தொடர்பு நிறுவனங்களை கேட்டுக்கொண்டது.

இதனை தொடர்ந்து தற்போது ஜியோ ரூ.259-க்கு புதிய காலண்டர் மாத வேலிடிட்டி ப்ரீபெய்டு திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் 24 நாட்கள், 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் பேக்கேஜ்களை வழங்குகின்றனர்.

30 அல்லது 31 நாட்கள் காலண்டர் மாதத்தை உள்ளடக்கிய திட்டங்கள் எதுவும் இல்லை. 28 நாட்கள் மாதாந்திர வேலிடிட்டி கொண்ட திட்டங்களால் வருடத்திற்கு 12 மாதங்களில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருப்பதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார் எழுந்தது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்க்கவே கடந்த ஜனவரியில் டிராய், டெலிகாம் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு பிளான் வவுச்சர், ஒரு ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு காம்போ வவுச்சரையாவது வழங்க உத்தரவிட்டது.

அதே போல ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய திட்டத்தை வழங்க நிறுவனங்களை கட்டாயப்படுத்தியது. ஆனால் ஒருவர் 31-ஆம் தேதி ரீசார்ஜ் செய்து அடுத்த மாதம் 30 தேதி தான் என்னும் போது எப்படி டிராய் உத்தரவை அமல்படுத்த முடியும் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டிராய் தனது உத்தரவை பரிசீலனை செய்து தெளிவுபடுத்தி உள்ளது.

Also Read : உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

அதன்படி ஏற்கனவே குறிப்பிட்டபடி நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் புதுப்பிக்கப்படும் திட்டங்களை வழங்க வேண்டும். ஒருவேளை அதே தேதி அடுத்த மாதம் இல்லை என்றால் அந்த மாதத்தின் கடைசி தேதி ரீசார்ஜ் செய்யும் தேதியாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இந்த புதிய உத்தரவை அமல்படுத்த டிராய், நிறுவனங்களுக்கு கூடுதலாக 60 நாள் அவகாசம் அளித்துள்ளது.

Also Read : வீடு வாங்குவோர் கவனத்திற்கு... இனி வரிச்சலுகை கிடையாது!

top videos

    புதிய உத்தரவுப்படி ஜனவரி 31 ஒருவர் ரீசார்ஜ் செய்தால் பிப்ரவரி 28 அல்லது 29 தான் அடுத்த மாதத்தின் கடைசி தேதியென்றால், இந்த 2 தேதியில் ஒரு தேதியில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை டிராய் தெளிவுபடுத்துகிறது. மேலே கூறியபடி ஒருவர் ஜனவரி 31-ல் ரீசார்ஜ் செய்தால், அவர் மீண்டும் பிப்ரவரி 28 அல்லது 29 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதால் இரண்டு நாட்களை இழக்க நேரிடும்.

    First published:

    Tags: Airtel, TRAI, Vodafone