Home /News /business /

தவித்து போன மக்கள்.. மன்னிப்பு கேட்ட Airtel நிறுவனம்!

தவித்து போன மக்கள்.. மன்னிப்பு கேட்ட Airtel நிறுவனம்!

ஏர்டெல்

ஏர்டெல்

Airtel users : பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் உள்ள ஏர்டெல் யூசர்களுக்கு நேற்றைய தினம் நெட்ஒர்க் சேவை முடங்கியதால் சில மணி நேரத்திற்கு சிரமத்தை அனுபவித்துள்ளனர். மும்பை மற்றும் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்கள் உட்பட பல பிராந்தியங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள்  ஏர்டெல் இணைப்பில் சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏர்டெல் நெட்வொர்க் சேவைகள் முடங்கியது தொடர்பான பல்வேறு குற்றசாட்டுகள் ட்விட்டரில் நேற்று குவிந்த வண்ணம் இருந்தன.

    இதனால் #AirtelDown என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. சமூக ஊடகங்களில், ஏர்டெல் யூசர்கள் தங்கள் மொபைல் இன்டர்நெட் மற்றும் கால் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தனர். பல யூசர்கள் பிராட்பேண்ட் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்ததாக புகார் செய்துள்ளனர். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என்றும் சில வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர்.

    இதையும் படிங்க.. Aadhar card : இந்த விதிகளை மீறினால் 1 கோடி அபராதம் உங்களுக்கு தெரியுமா?

    இந்த செயலிழப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏர்டெல் யூசர்களை பாதித்துள்ளதாக, இணைய செயலிழப்பைக் கண்காணிக்கும் DownDetector-ரும் உறுதிப்படுத்தியுள்ளது. DownDetector இல் வெளியான விவரங்களின்படி, நேற்று காலை 11 மணியளவில் ஏர்டெல் சேவையில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் காலை 11:18 மணி நிலவரப்படி சுமார் 3,729 யூசர்கள் தங்கள் இணைப்பில் பிரச்சனையை எதிர்கொண்டதாக புகாரளித்துள்ளனர். பல நெட்வொர்க்தாரர்கள், இந்த சிக்கலை எதிர்கொள்வது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும் என்றும் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க..SBI முக்கிய எச்சரிக்கை : இதை செய்யவில்லை என்றால் சேவைகள் நிறுத்தப்படுமாம்!

    இந்த நிலையில், நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் சேவையில் முடக்கம் ஏற்பட்டதை ஏர்டெல் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இந்திய டெலிகாம் வழங்குநரான ஏர்டெல் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக புதிய ட்வீட்வை வெளியிட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனம் குறிப்பிட்டிருந்ததாவது, "எங்கள் இணைய சேவைகள் தற்காலிகமாக தடைபட்டுள்ளன. உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். எங்கள் குழுக்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க இடைவிடாமல் உழைத்து வருவதால், இப்போது எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளது.



    டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் பல முக்கிய நகரங்களில் இந்த செயலிழப்பு ஏற்பட்டிருந்ததாக டவுன் டிடெக்டர் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்குப் முன்பு தான், ஏர்டெல் நிறுவனத்தின் போட்டியாளரான ஜியோவும் இதேபோன்ற செயலிழப்பை எதிர்கொண்டது. இந்த செயலிழப்பால் மும்பை பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் சிரமத்தை சந்தித்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Airtel, Recharge Plan

    அடுத்த செய்தி