Home /News /business /

Airtel ரீசார்ஜ் செய்திருப்பவர்கள் இந்த சேவையை தெரிந்து கொள்வது நல்லது!

Airtel ரீசார்ஜ் செய்திருப்பவர்கள் இந்த சேவையை தெரிந்து கொள்வது நல்லது!

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் ஆப் டவுன்லோடு செய்து பயன்படுத்த விரும்பாதவர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகார பூர்வ வெப்சைட்டிற்கு சென்று அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    நமது மொபைலுக்கு போடப்படும் ப்ரீபெய்ட், போஸ்ட் பெயிட், இன்டர்நெட் பிளான் போன்றவற்றை அறிந்து கொள்வதில் சிலருக்கு சிரமம் இருக்க கூடும். இதை எளிதான முறையில் தெரிந்துகொள்ள அந்தந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் சில வழிமுறைகளை தந்துள்ளது. பலர் இவற்றை பற்றி அறிந்திராமல் இருக்கின்றனர். இந்த பதிவில் ஏர்டெல் சேவைகளை பயன்படுத்துவோர் எப்படி தங்களது மொபைலில் இந்த வழிமுறைகளை எளிதாக தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

    USSD எண்கள் :

    கட்டமைக்கப்படாத துணை சேவை தரவு என்பதை தான் USSD என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இந்த வசதியை பயன்படுத்தி சில கோடுகளின் மூலம் உங்களுக்கு தேவையான பல தகவல்களை மொபைலை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். உங்களின் ஏர்டெல் டேட்டா பேலன்ஸை செக் செய்வதற்கு *123*10# என்கிற USSD எண்ணை டைப் செய்து தெரிந்து கொள்ளலாம். இது ப்ரீபெயிட் சேவைகளுக்கான எண். ஏர்டெல் எஸ்.எம்.எஸ் பேலன்ஸை அறிய *121*7# என்கிற எண்ணிற்கு டயல் செய்யலாம்.

    கிரெடிட் கார்டு வாங்க ஆசையா..? எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

    உங்களின் பிளான் வேலிடிட்டி பற்றிய விவரங்களை *121*2# என்கிற USSD எண்ணை டைப் செய்து தெரிந்து கொள்ளலாம். டாக்டைம் சேவைகள் பற்றி அறிய *123# என்கிற எண்ணிற்கு டயல் செய்யலாம். மேலும் ஏர்டெல் போஸ்ட் பெயிடு சேவை விவரங்களை தெரிந்து கொள்ள *121# எண்ணை அணுகலாம். இவை அனைத்தையும் USSD எண்கள் உதவியுடன் செய்து முடிக்கலாம்.

    ஏர்டெல் ஆப் :

    USSD எண்களை பயன்படுத்துவதற்கு சிரமமாக உள்ளோர் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை (Airtel Thanks app) பயன்படுத்தி மிக எளிமையான முறையில் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் சென்று Airtel Thanks app என்று டைப் செய்து டவுன்லோடு செய்து கொள்ளவும். பிறகு உங்களின் ஏர்டெல் நம்பரை அதில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அடுத்ததாக கீழே இடது புறமாக உள்ள 'Services' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் ரீசார்ஜ் விவரங்கள், டேட்டா பயன்பாடு, எஸ்.எம்.எஸ் பேலன்ஸ் மற்றும் பலவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் இதில் உங்களின் பிளான் வேலிடிட்டியை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    ரூ.200-க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் இந்த ஆஃபர்களை யூஸ் பண்ணிக்கலாம்!

    ஏர்டெல் வெப்சைட் :

    ஏர்டெல் ஆப் டவுன்லோடு செய்து பயன்படுத்த விரும்பாதவர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகார பூர்வ வெப்சைட்டிற்கு சென்று அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு கூகுளில் 'Airtel Selfcare' என்று டைப் செய்து முதலில் வரும் வெப்சைட்டை திறந்து கொள்ளவும். பிறகு அதில் உள்நுழைய ஓடிபி உங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அதை டைப் செய்து உள்ளே நுழைந்து உங்களின் ஏர்டெல் சேவையின் மெயின் பேலன்ஸ், டேட்டா, எஸ்.எம்.எஸ் பேலன்ஸ், மற்றும் பலவற்றை பார்க்கலாம்.

    கஸ்டமர் கேர் நம்பர் :

    ஏர்டெல் டேட்டா பேலன்ஸ், டாக்டைம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஏர்டெல்லின் டோல்-ஃப்ரீ நம்பர்களை அணுகலாம். அதன்படி ஏர்டெல் கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ள 121 எண்ணிற்கு டயல் செய்யலாம். ஏர்டெல் நெட்வொர்க்கில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்க 198 எண்ணை தொடர்பு கொள்ளலாம். DND சேவைகளை ஆக்டிவேட் செய்ய 1909 என்கிற எண்ணிற்கு டயல் செய்யலாம். மேலும் ஏர்டெல் ரீச்சார்ஜ்-இற்கு 123 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Airtel, Jio

    அடுத்த செய்தி