3ஜி சேவையை நிறுத்தும் ஏர்டெல்!

இந்தியாவில் முழுமையாக 4ஜி சேவையை மட்டும் வழங்கும் நெட்வொர்க்காக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது.

news18
Updated: June 29, 2019, 6:55 PM IST
3ஜி சேவையை நிறுத்தும் ஏர்டெல்!
மாதிரிப் படம்
news18
Updated: June 29, 2019, 6:55 PM IST
பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சந்தையை இழந்து வரும் நிலையில், 3ஜி சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்த ஏர்டெல் இன்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டும் வருவாயும் குறைந்துகொண்டே வருகிறது.

எனவே செலவுகளை குறைப்பதற்காக 3ஜி சேவையை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு திருப்பும் பணிகளில் ஏர்டெல் இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை முதல் ஏர்டெல் 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது.


வரும் காலங்களில் இது பிற நகரங்களுக்கும் நடைமுறைக்கு வரலாம். 3ஜி சேவை நிறுத்தப்பட்டாலும் 2ஜி சேவை தொடர்ந்து கிடைக்கும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள், தற்போது வரை ஃபீயூச்சர் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் 4ஜி-க்கு மாற்றுவது எளிதல்ல.

அதனால்தான் 2ஜி சேவையை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறைந்தது மாதத்திற்கு 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

Loading...

தற்போது ஏர்டெல் 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 50 சதவீதத்தினர் வோல்ட் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆனால் ஏர்டெல்லின் மொத்த வாடிக்கையாளர்களில் 70 சதவீதத்தினர் 2ஜி அல்லது 3ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

3ஜி சேவையை நிறுத்தும் போது பெரியதாக வாடிக்கையாளர்கள் வெளியேற மாட்டார்கள். அவர்களை எளிதாக 4ஜி சேவைக்கு மாற்றிவிடலாம், செலவும் குறையும் என ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் முழுமையாக 4ஜி சேவையை மட்டும் வழங்கும் நெட்வொர்க்காக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது.

மேலும் பார்க்க:
First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...