• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஏர்டெல் பிரீபெயிட் கட்டணங்கள் அதிரடியாக 20-25% உயர்வு!

ஏர்டெல் பிரீபெயிட் கட்டணங்கள் அதிரடியாக 20-25% உயர்வு!

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண உயர்வுடன் கூடிய புதிய கட்டண திட்டங்கள் நவம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 25 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.  ஏர்டெல் நிறுவனத்தின் இந்த கட்டண உயர்வு அதன் வாடிக்கையாளர்க்ளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம்  கடந்த சில மாதங்களாகவே தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 46 லட்சம் வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் இழந்திருந்தது. இது ஒருபுறம் இருக்க, தனது பிரிபெயிட் திட்டங்களுக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை பார்தி ஏர்டெல் உயர்த்தியுள்ளது.

    இந்த கட்டண உயர்வு நவம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒரு பயனாளர் மூலம் பெறப்படும் சராசரி வருவாயை (ARPU) இதற்கு காரணமாக அந்நிறுவனம் கூறுகிறது. இந்த கட்டண உயர்வை தொடர்ந்து 28 நாட்களுக்கான திட்டத்தின் கட்டணம் 77 ரூபாயில் இருந்து 99 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதியுடன் 28 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தின் கட்டணம் 149 ரூபாயில் இருந்து 179 ரூபாயாகவும்,  தினசரி  1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதியுடன் 28 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தின் கட்டணம் 219 ரூபாயில் இருந்து  265 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: செலவை குறைக்க போஸ்ட் ஆபீஸ் தரும் வாய்ப்பு.. ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!


    தினசரி  1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதியுடன்56 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தின் கட்டணம் 399 ரூபாயில் இருந்து  479 ரூபாயாகவும் தினசரி  2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதியுடன் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தின் கட்டணம் 449 ரூபாயில் இருந்து 100ரூபாய் அதிகரித்து 549 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    டேட்டா டாப் அப் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. 10 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க: இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள Moto-வின் புத்தம் புதிய 3 ஸ்மார்ட் ஃபோன்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: