முகப்பு /செய்தி /வணிகம் / Airtel: ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. சராசரியாக ரூ.200 வசூலிக்க திட்டம்

Airtel: ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. சராசரியாக ரூ.200 வசூலிக்க திட்டம்

ஏர்டெல்

ஏர்டெல்

'இந்த வருடத்தில் சில கட்டண உயர்வை நாம் காணத் தொடங்க வேண்டும். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாக இருப்பதாக நான் நம்புகிறேன். ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க வேண்டும்’ என ஏர்டெல் சி.இ.ஓ. கோபால் விட்டல் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. பயனர்களிடம் இருந்து சராசரி கட்டணமாக ரூ.200 வசூலிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் விளங்குகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ப்ரிபெய்ட் கட்டணத்தை உயர்த்தின. ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியதால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில்,  தற்போது மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் இத்தகவலை உறுதி செய்துள்ளார். இந்த முறை பயனர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சராசரி கட்டணமாக (ARPU) ரூ.200ஐ நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5ஜி சேவைக்கான அடிப்படை விலை நிர்ணயம் ஏர்டெல் நிறுவனத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையை குறைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையத்திடம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வலியுறுத்தின. இதை தொடர்ந்து விலை குறைக்கப்பட்டபோதிலும் அது போதுமானதாக இல்லை. 5ஜி ரிவர்ஸ் விலையை 90 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறி வருகின்றன.

இதையும் படிங்க: ICCW: டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!

இந்தநிலையில்தான், ‘ இந்த வருடத்தில் சில கட்டண உயர்வை நாம் காணத் தொடங்க வேண்டும். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாக இருப்பதாக நான் நம்புகிறேன். ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க வேண்டும்’ என கோபால் விட்டல் கூறியுள்ளார். இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Airtel, Prepaid, Telecom