முகப்பு /செய்தி /வணிகம் / ஃபைபர், அமேசான் மற்றும் நெட்பிலிக்ஸ் இலவச சந்தாவுடன் வரும் ஏர்டெல் பிளாக் திட்டங்கள்

ஃபைபர், அமேசான் மற்றும் நெட்பிலிக்ஸ் இலவச சந்தாவுடன் வரும் ஏர்டெல் பிளாக் திட்டங்கள்

ஏர்டெல்

ஏர்டெல்

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் பிளாக் என்ற மூன்று நன்மைகள் கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் மொபைல் சேவை, ஃபைபர் சேவை மற்றும் DTH ஆகிய மூன்று சேவைகளையும் ஒரே தொகுப்பில் பெற முடியும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் தற்பொழுது ஓடிடி தளங்களுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே டெலிகாம் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் ஓடிடி சந்தாக்களின் விலையை மொபைல் பயன்பாடு, கணினி, தொலைக்காட்சி என்று வெவ்வேறு விலையில் வழங்கினாலும், டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து மலிவான விலையில் சந்தாக்களை வழங்கி வருகிறது. இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் பிளாக் என்ற மூன்று நன்மைகள் கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் மொபைல் சேவை, ஃபைபர் சேவை மற்றும் DTH ஆகிய மூன்று சேவைகளையும் ஒரே தொகுப்பில் பெற முடியும். மேலும், இந்தத் திட்டங்களில் டிஸ்னி, அமேசான், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாவும் இணைத்துள்ளது. இந்த திட்டங்களைப் பற்றிய முழு விவரம் இங்கே.

ஏர்டெல் பிளாக் ரூ. 699 திட்டம்: இந்தத் திட்டத்தில், யூசர்கள் ஃபைபர் இணைப்பு, லேண்ட்லைன் இணைப்பு மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் ஆகிய மூன்று சேவைகளுடன், 40 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவைகளைப் பெறலாம். மாதாந்திர பில்லிங் சுழற்சியுடன் வழங்கப்படும் இந்தத் திட்டத்தில், DTH இணைப்புடன் ரூ.300 மதிப்புள்ள TV சேனல்களை இலவசமாக பெறுவதோடு மட்டுமல்லாமல், ஏர்டெல் xstream, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆகிய ஓ டி டி தளங்களுக்கான இலவச சந்தாவையும் பெறலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியின் யூசர்கள், சோனிலைவ், லயன்ஸ் கேட் உள்ளிட்ட கூடுதல் ott தளங்களின் அக்சஸ் பெறலாம்.

ஏர்டெல் பிளாக் ரூ. 899 திட்டம்: இந்தத் திட்டத்தில், யூசர்கள் இரண்டு போஸ்ட்பெயிட் DTH இணைப்புகளை ஒன்று சேர்த்து, மாதம் 105 gb டேட்டா, அன்லிமிடட் காலிங் மற்றும் கூடுதல் சேவைகளைப் பெறலாம். ஏர்டெல் xstream, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஆகிய ஓ டி டி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளாக் ரூ. 1098 திட்டம்: இந்தத் திட்டத்தில், ஃபைபர் இணைப்புடன், லேண்ட்லைன் இணைப்பு மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் ஆகிய மூன்று சேவைகளுடன், 100 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவைகளைப் பெறலாம். போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பில் 75 gb டேட்டாவுடன் வருகிறது. ஏர்டெல் xstream, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஆகிய ஓ டி டி தளங்களுக்கான இலவச சந்தாவையும் பெறலாம்.

Read More : களத்தில் குதித்த பிஎஸ்என்எல்.. ரூ.99க்கு இவ்வளவு வசதிகளா.? BSNL அறிவித்த அசத்தல் ஆஃபர்!

ஏர்டெல் பிளாக் ரூ. 1099 திட்டம்: இந்தத் திட்டத்தில், யூசர்கள் ஃபைபர் இணைப்பு, லேண்ட்லைன் இணைப்பு மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் ஆகிய மூன்று சேவைகளுடன், 200 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவைகளைப் பெறலாம். ரூ. 350 மதிப்புள்ள DTH டிவி சேனல்கள் உடன் ஏர்டெல் xstream, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளாக் ரூ. 1599 திட்டம்: ஃபைபர் இணைப்பு, லேண்ட்லைன் இணைப்பு மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் ஆகிய மூன்று சேவைகளுடன், 300 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவைகளைப் பெறலாம். DTH டிவி சேனல்கள் உடன் ஏர்டெல் xstream, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் நெட்பிலிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளாக் ரூ. 1799 திட்டம்:  இந்தத் திட்டத்தில் ஃபைபர் இணைப்பு, லேண்ட்லைன் இணைப்பு மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் உடன் 4 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்புகளை பெறலாம். ஃபைபர் இணைப்பில் 200 Mbps வேகத்தில், 190 gb டேட்டா கிடைக்கிறது. DTH டிவி சேனல்கள் உடன் ஏர்டெல் xstream, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளாக் ரூ. 2299 திட்டம்:  ஃபைபர் இணைப்பு, லேண்ட்லைன் இணைப்பு மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் ஆகிய மூன்று சேவைகளுடன், 4 போஸ்ட்பெயிட் மொபைல் எண்களை இணைத்துக் கொள்ளலாம். 300 Mbps வரையிலான வேகத்தில் இன்டர்நெட் சேவைகளை 240 gb டேட்டா வழங்கப்படுகிறது.

First published:

Tags: Airtel, Mobile networks