கோடிகளுடன் சேர்த்து வாடிக்கையாளர்களையும் இழந்த சோகத்தில் ஏர்டெல்!

2018 நவம்பரில் ஏர்டெல் நிறுவனத்திற்கு 34.1 கோடி வாடிக்கையாளர்கள் இருந்ததாக டிராய் தெரிவித்திருந்தது. இது டிசம்பர் மாத இறுதியில் 28.42 கோடியாக குறைந்தது.

கோடிகளுடன் சேர்த்து வாடிக்கையாளர்களையும் இழந்த சோகத்தில் ஏர்டெல்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 2, 2019, 5:48 PM IST
  • Share this:
2018-ம் ஆண்டு வரை இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமாக இருந்து வந்த ஏர்டெல் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் வணிக ரீதியான டெலிகாம் சேவை வந்த பிறகு தான் ஏர்டெல் நஷ்டம் அடைந்துள்ளது என்று கூறுகின்றனர்.

2018 நவம்பர் மாதம் ஏர்டெல் நிறுவனத்திற்கு 34.1 கோடி வாடிக்கையாளர்கள் இருந்ததாக டிராய் தெரிவித்திருந்தது. இதுவே டிசம்பர் மாத இறுதியில் ஏர்டெல் 5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்து 28.42 கோடி வாடிக்கையாளர்களுடன் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


நஷ்டம் ஒருபக்கம் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக ஏர்டெல் அதிகளவில் வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் குறைந்தபட்சம் மாதத்திற்கு 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று அறிவித்தது ஆகும். ஆனால் ஏர்டெல் நிறுவனம் இது 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி-க்கு மாற்றும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறது.

அதே நேரம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமிருந்தும் சராசரியாக 118 ரூபாயை வருவாயாகப் பெற்றுள்ளது. இது இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.1 சதவீத சரிவு.

2ஜி வாடிக்கையாளர்கள் அதிகளவில் ரீசார்ஜ் செய்வதில்லை. இதுவே 4ஜி என்றால் வாடிக்கையாளர்கள் குறைந்தது மாதத்திற்கு 150 ரூபாய்க்கு செய்வார்கள் இதன்மூலம் வருவாய் அதிகரிக்கும் என்று ஏர்டெல் எதிர்ப்பார்க்கிறது.இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் நிதி அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில், ‘ரிலையன்ஸ் ஜியோஃபோன் போன்று வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவையை வழங்க விருப்பமில்லை. நேரடியாக வாடிக்கையாளர்களை ஸ்மார்ட்போனுக்கு மாற்ற முயன்று வருகிறோம்’ என்றார்.

மேலும் படிக்க: பட்ஜெட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதா பாஜக?
First published: February 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading