பண்டிகைக்காலம் வந்தாச்சு கண்டிப்பா இந்த தீபாவளிக்கு உங்களுக்கு ஸ்டேடஸ் போட, மெசேஜ் ஷேர் பண்ண நிறைய டேட்டா தேவைப்படலாம். அதுக்காக தான் போட்டி போட்டு உங்களுக்கான தீபாவளி ஆஃபர்ஸை ஏர்டெல்,ஜியோ,வோடோஃபோன் கொடுத்திருக்காங்க.
நீங்கள் ஏர்டெல், ஜியோ அல்லது வோடபோன் ஐடியாவின் அன்லிமிடெட் அழைப்புத் திட்டங்களில் ஒன்றைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், இது உங்களுக்குத் தான். குறைந்த மதிப்பில் அன்லிமிட்டட் சந்தாக்கள் மற்றும் ஸ்பெஷல் ரீசார்ஜ் பிளான்களை இப்போது காணலாம்.
ஏர்டெல்
ஏர்டெல் ரூ.209 திட்டம். இது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை 21 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களால் தாரளமாக உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்க இயலும்.
Read More : 5G மொபைல் டேட்டா... எதன் வேகம் அதிகம்? ஏர்டெல்-லா அல்லது ஜியோ-வா.?
உங்களுக்கு அதிகப்படியான டேட்டா தேவையில்லை என்றால், ஏர்டெல் ரூ.155 மற்றும் ரூ.179 திட்டங்களில் முறையே 1ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டாவை 24 மற்றும் 28 நாட்களுக்கு பெற முடியும். உங்களிடம் ஏற்கனவே அன்லிமிட்டெட் டேட்டா இருக்கும்பட்சத்தில் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் டேட்டா பூஸ்டர் பேக்குகளையும் போட்டுக்கொள்ளலாம். ரூ.148 திட்டம் 15ஜிபி டேட்டாவை, ரூ.118 திட்டமானது 12ஜிபியையும், ரூ.98ல் 5ஜிபியையும், ரூ.58ல் 3ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ ரூ 149 திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 20 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. ரூ.179 மற்றும் ரூ.209 திட்டங்கள் முறையே 24 நாட்கள் மற்றும் 28 நாட்களுக்கு அதே பலன்களை வழங்குகின்றன. இது தவிர நீங்கள் டேட்டா குறைவாக பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்காக ரூ.155 மதிப்புள்ள 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சந்தாவும் உள்ளது.
அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு ஜியோ சில டேட்டா பூஸ்டர் திட்டங்களையும் வழங்குகிறது. அதன்படி, பயனர்கள் ரூ.25க்கு 2ஜிபி, ரூ.61க்கு 6ஜிபி மற்றும் ரூ.121க்கு 12ஜிபி பெறலாம்.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா ரூ.269 திட்டத்தை வழங்குகிறது, இது பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ரூ.234 திட்டம் 24 நாட்களுக்கு அதே பலன்களை வழங்குகிறது, ரூ.199 திட்டம் 18 நாட்களுக்கு அதே பலன்களை வழங்குகிறது. இது ரூ.149, ரூ.155 மற்றும் ரூ.209 திட்டங்களில் முறையே 1ஜிபி டேட்டாவை 21 நாட்களுக்கும், 1ஜிபி மொத்த டேட்டாவை 24 நாட்களுக்கும், 4ஜிபி டேட்டாவை முறையே 28 நாட்களுக்கும் வழங்குகிறது.
கூடுதல் டேட்டா பூஸ்டர்களை மட்டும் தேடுபவர்களுக்கு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப்புடன் 30 நாட்களுக்கு 8ஜிபி டேட்டாவுடன் ரூ.151 திட்டத்தை வோடபோன் வழங்குகிறது, ரூ.82 திட்டம் 4ஜிபி டேட்டாவை 14 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் ரூ.118 பிளானில் 12ஜிபி டேட்டாவை 28க்கு வழங்குகிறது. ரூ.58 ரூபாய்க்கு 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டமும்,ரூ.39 ரூபாய்க்கு 7 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமும், ரூ.29 ரூபாய்க்கு 2 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமும், ரூ.108 ரூபாய்க்கு 15 நாட்களுக்கு 6ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமும் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.