• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • குறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் விவரம்

குறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் விவரம்

ஏர்டெல், ஜியோ

ஏர்டெல், ஜியோ

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ (Vi) உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் (84 நாட்கள்) தினசரி1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

  • Share this:
மாதாந்திர கட்டாய மற்றும் அத்தியாவசிய செலவுகளின் பட்டியலில் முக்கியமான ஒன்றாக இருப்பது மொபைல் ரீசார்ஜ் செலவுகள். கொரோனா தாக்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் மீண்டும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்து முடிக்கும் Work From Home-க்கு திரும்பியுள்ள நிலையில், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கான ( 28 நாட்கள் அல்லது 56 நாட்களுக்கு) ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களுக்கு பதில் கூடுதல் நன்மைகளுடன் (additional benefits) நாளொன்றுக்கு அதிக டேட்டாக்களை பெற விரும்புகிறார்கள். ஆனால் இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் பிளானிற்கு செல்ல தேவை இல்லை.

ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ (Vi) உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் (84 நாட்கள்) தினசரி 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த திட்டங்களில் சில கூடுதல் டேட்டா கூப்பன்கள் (extra data coupons) மற்றும் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்ளின் ஸ்ட்ரீமிங் Apps-களுக்கான அக்ஸஸ் போன்ற கூடுதல் நன்மைகளையும் தருகின்றன.

அந்த வகையில் Vi நிறுவனம் தனது தினசரி 2 ஜிபி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் டபுள் டேட்டா நன்மையை (double data benefit) அளிக்கிறது. இந்த பிளான் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது. தினசரி 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாக கூடிய பின்வரும் பிளான்கள் விவரம் பின்வருமாறு.,

ALSO READ : ஆன்லைன் மூலம் NRI கணக்கை திறப்பது எப்படி?

ரூ.598 ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான்:

இந்த பிளான் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வரம்பற்ற அழைப்புகளுடன் (truly unlimited calls) வழங்குகிறது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்வதால் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோ ட்யூன்ஸ், விங்க் மியூசிக், இலவச ஆன்லைன் படிப்புகள் மற்றும் FASTag பரிவர்த்தனைகளில் ரூ.150 கேஷ்பேக், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

ரூ.555 ஜியோ ப்ரீபெய்ட் பிளான்:

இந்த ரீசார்ஜ் பிளான் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தவிர இந்த பிளான் ஜியோவிலிருந்து நாட்டின் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த பேக் ஜியோ apps-களுக்கான சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

ALSO READ :  EPF பேலன்ஸ் தெரிந்து கொள்ள கஷ்டப்படுகிறீர்களா? இதோ 4 வழிகள்!

ரூ.599 Vi ப்ரீபெய்ட் பிளான்:

Vi நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற கால்களை (unlimited call) வழங்குகிறது. இது அதிவேக இரவுநேர இன்டர்நெட், வீக் எண்ட் ரோல் ஓவர் டேட்டா நன்மைகள் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவி அக்ஸஸ் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. யூஸர்கள் Vi app மூலம் இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், அவர்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும்.

ரூ.698 ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான்:

இந்த பிளான் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் கூடிய வரம்பற்ற அழைப்புகள் (truly unlimited calls) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் App மூலம் ரூ.598 அல்லது அதற்கு மேல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யப்படும் பிளான்களுக்கு, ஆறு 1 ஜிபி டேட்டா கூப்பன்களை ஏர்டெல் வழங்குகிறது.

ALSO READ :  வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் இதை மட்டும் தவறாம பண்ணுங்க!

ரூ.599 ஜியோ ப்ரீபெய்ட் பிளான்:

இந்த ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டாவை தருகிறது. மேலும் ஜியோவிலிருந்து நாட்டின் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகளை வழங்குகிறது. கூடுதலாக இந்த பேக் ஜியோ apps-களுக்கான சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

ரூ.699 Vi ப்ரீபெய்ட் பிளான்:

மேற்காணும் அனைத்து பிளான்களை விட இது கொஞ்சம் காஸ்டலி என்றாலும் நன்மைகள் மிக அதிகம். ஏனென்றால் இந்த பிளான் வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா நன்மையை அளிக்கிறது. அதாவது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ், வார நாட்களில் நீங்கள் பயன்படுத்தாத டேட்டா அளவை வார இறுதி நாட்களில் பயன்படுத்த அனுமதிக்கும் வீக் எண்ட் ரோல் ஓவர் டேட்டா திட்டத்தை நிறுவனம் வழங்குகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: