ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனுடன் வரும் பிராட்பேண்ட் திட்டம் பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான செய்தி இங்கு காத்திருக்கிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் வழங்கும் முக்கியமானத் திட்டங்கள் குறித்தும், அதில் கிடைக்கும் சலுகைகள் குறித்து இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிடி தளங்கள் நாளுக்கு, நாள் பிரபலமாகி வரும் நிலையில், அந்த சேவையை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்த டெலிகாம் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. சில டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் உங்களுக்கு அதிவேக இன்டர்நெட் இணைப்புடன், ஓடிடி சேவையும் சேர்ந்தே கிடைக்கிறது. அதாவது, ஒரே கட்டணத்தில் வெவ்வேறு சேவைகள் இணைந்து கிடைக்கின்றன. ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் 300 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட் இணைப்புடன், வழங்கும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ஃபைபர் பிராண்பேண்ட் திட்டம் : கவர்ச்சிகரமான கூடுதல் பலன்களுடன் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை ஜியோ ஃபைபர் நெட் வழங்குகிறது. இதற்கு மாதாந்திர கட்டணம் ரூ.1,499 ஆகும். 30 நாட்கள் வேலிடிட்டி உடையது. யூசர்களுக்கு 3,300 ஜிபி வரையில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கும். அப்லோடு மற்றும் டவுன்லோடு ஆகிய இரண்டுமே 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இருக்கும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றுக்கான ஓராண்டு சப்ஸ்கிரிப்ஷன் இதனுடன் கிடைக்கும்.
ALSO READ | புதிய வாடிக்கையாளர்களை இனி இணைக்க கூடாது.. பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
ஏர்டெல் எக்ஸ் ஸ்டிரீம் ஃபைபர் : அமேசான் பிரைம் வீடியோ, விங்க் மியூஸிக் மற்றும் ஷா அகாடமி ஆகிய தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் வசதியுடன், 300 எம்பிபிஎஸ் வேகத்துன் ஏர்டெல் எக்ஸ் ஸ்டிரீம் ஃபைபர் கனெக்ஷன் வழங்கப்படுகிறது. இதனுடன் நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களையும் அனுபவிக்கலாம். மாதந்தோறும் ரூ.1,499 கட்டணத்தில் உங்களுக்கு ஹை ஸ்பீடு இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இதில், 3,500 ஜிபி வரையில் அதிவேக இணைப்பு கிடைக்கும். இந்தத் திட்டம் டெல்லிக்கு மட்டுமானது. மற்ற நகரங்களில் இதில் இருந்து சிறிய அளவுக்கு வேறுபாடுகள் இருக்கும்.
பிஎஸ்என்எல் 300 எம்பிபிஸ் திட்டம் : ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு நிகரான கட்டணத்திலேயே உங்களுக்கான சேவைகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வழங்குகிறது. ‘ஃபைபர் அல்ட்ரா’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 4,000 ஜிபி வரையில் அதிவேக இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அன்லிமிடெட் டேட்டா டவுன்லோடு, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் ஆகியவை கிடைக்கும். இது தவிர வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திற்கான இலவச சப்ஸ்கிரிப்ஷன் வசதி உண்டு.