பொழுதுபோக்கு செயலியான டிஸ்னி+ஹாட்ஸ்டார் OTT தளம் சமீபத்தில் அதன் சந்தாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து, தொலைத்தொடர்பு ஆபரேட்டரான பாரதி ஏர்டெல், டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய மொபைல் ப்ரீபெய்ட் மற்றும் ஹோம் பிராட்பேண்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி ஏர்டெல் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்களின் விலையை ஏர்டெல் எவ்வளவு உயர்த்தியுள்ளது என்பதை பின்வருமாறு காணலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
* 28 நாட்கள் வாலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டத்தின் விலை ரூ. 448-லிருந்து ரூ. 499 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேக்கில் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 3GB டேட்டாவை பெறுவர். அதேபோல ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். கூடுதலாக ரூ.499 மதிப்புள்ள டிஸ்னிப்+ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா, மொபைல் எடிஷனுக்கான இலவச பிரைம் வீடியோ சந்தா, விங்க் மியூசிக் உள்ளிட்ட செயலிகளுக்கான இலவச அணுகலை பெறலாம்.
* 56 நாட்கள் வாலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டத்தின் விலை ரூ. 599-லிருந்து ரூ.699 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேக் மூலம் நாளொன்றுக்கு 2GB டேட்டா கிடைக்கும். அதேபோல ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். கூடுதலாக ரூ.499 மதிப்புள்ள டிஸ்னிப்+ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா, மொபைல் எடிஷனுக்கான இலவச பிரைம் வீடியோ சந்தா, விங்க் மியூசிக் உள்ளிட்ட சில செயலிகளுக்கான இலவச அணுகலை பெறலாம்.
* ஒரு வருட வாலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டத்தின் விலை ரூ .2,698 இலிருந்து ரூ .2,798 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாட்கள் வாலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக ரூ.499 மதிப்புள்ள டிஸ்னிப்+ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா, மொபைல் எடிஷனுக்கான இலவச பிரைம் வீடியோ சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் உள்ளிட்ட சில செயலிகளுக்கான இலவச அணுகலை பெறலாம்.
இதுதவிர, ஏர்டெல்லின் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களும் ஒரு வருட இலவச டிஸ்னி+
ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அது ரூ.499-க்கு மேல் மதிப்புள்ள போஸ்ட்பெய்ட் பிளான்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Also read... விரைவில் அறிமுகமாகிறது Realme Narzo 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்... விலை மற்றும் அம்சங்கள்!
அதேபோல, ரூ. 999-க்கு மேல் உள்ள அனைத்து ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளின் ஒரு பகுதியாக ரூ. 899 மதிப்புள்ள ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர் சப்ஸ்கிரிப்ஷன் பேக் உடன் வரும் என்று ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரால் செய்யப்பட்ட விலை மாற்றங்களை குறித்து அனுப்பியுள்ளதாகவும், தற்போது வழங்கப்படும் சலுகைகளில் வேறு எந்த மாற்றமும் இல்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.