Home /News /business /

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.1099 திட்டம்; ஒரே ரீசார்ஜ் ஓஹோன்னு நன்மைகள்!

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.1099 திட்டம்; ஒரே ரீசார்ஜ் ஓஹோன்னு நன்மைகள்!

Airtel Recharge Scheme | முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல் நிறுவனம் ரூ.1,349 திட்டத்தை வழங்குவதை நிறுத்திக்கொண்டது.

Airtel Recharge Scheme | முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல் நிறுவனம் ரூ.1,349 திட்டத்தை வழங்குவதை நிறுத்திக்கொண்டது.

Airtel Recharge Scheme | முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல் நிறுவனம் ரூ.1,349 திட்டத்தை வழங்குவதை நிறுத்திக்கொண்டது.

    பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ஏர்டெல் பிளாக் தொகுப்பின் கீழ் ரூ.1,099 மதிப்புள்ள ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கான ஒரு திட்டமாகும். அதாவது புதிய ரூ.1,099 ஏர்டெல் பிளாக் திட்டத்தில் மொபைல் போஸ்ட்பெய்டு யூசர்களுக்கு எந்த குறிப்பிட்ட நன்மைகளும் இருக்காது; இது வெறும் பிராட்பேண்ட் மற்றும் டிடிஎச் சேவைகளுக்கான ஒரு திட்டமாகும்.

    நினைவூட்டும் வண்ணம் மற்ற ஏர்டெல் பிளாக் திட்டங்களானது போஸ்ட்பெய்ட் கனெக்ஷன்ஸ் மற்றும் பிராட்பேண்ட் மற்றும் டிடிஎச் நன்மைகளை வழங்குகிறது. இதே ஏர்டெல் பிளாக் தொகுப்பின் கீழ் அணுக கிடைக்கும் ரூ.1,098 பிளான் ஆனது பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் போஸ்ட்பெய்ட் நன்மைகளை வழங்குகிறது என்பதும், முன்னதாக பிளாக் கஸ்டமர்களுக்கு அணுக கிடைத்த ரூ.1,349 திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே நீக்கிவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம், ரூ.1,349 ஆனது கடந்த ஆண்டு ரூ.998, ரூ.1,598, மற்றும் ரூ.2,099 திட்டங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரூ.1,099 திட்டத்தின் நன்மைகள்:

    ஏர்டெல் தளத்தில் உள்ள பட்டியலின்படி, ரூ.1,099 ஏர்டெல் பிளாக் திட்டமானது லேண்ட்லைன் கனெக்ஷன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஏர்டெல் பிராட்பேண்ட் மூலம் 200 எம்பிபிஎஸ் வேகத்திலா இண்டர்நெட்டை வழங்குகிறது. இதில் ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களை அணுக உதவும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி கனெக்ஷனும் உள்ளது. மேலும் இந்த ரூ.1,099 ஏர்டெல் பிளாக் திட்டத்தில் ஒரு வருட அமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தாவும் அடங்கும்.

    டெலிகாம்டால்க் வழியாக வெளியான அறிக்கையின்படி, ரூ.1,099 ஏர்டெல் பிளாக் திட்டத்தில் போஸ்ட்பெய்டு இணைப்புக்கான எந்த நன்மையையும் அணுக கிடைக்காது. ஏனெனில் இது லேண்ட்லைன், ஃபைபர் மற்றும் டிடிஎச் சேவைகளைத் தேடும் பயனர்களுக்கானது.

    ரூ.1,098 திட்டத்தின் நன்மைகள்:

    ரூ.1,098 ஏர்டெல் பிளாக் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எம்பிபிஎஸ் வேகத்திலான இண்டர்நெட் அணுகல் மற்றும் பிராட்பேண்ட் யூசர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா ஒதுக்கீடு ஆகியவைகள் அணுக கிடைக்கிறது. மேலும் ரூ.1,098 திட்டத்தில் 75ஜிபி அளவிலான டேட்டா மற்றும் போஸ்ட்பெய்டு கனெக்ஷன்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மைகளும் அடங்கும்.

    Airtel, Vodafone-ல் அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் விரைவில் அறிமுகம்


    நிறுத்தப்பட்ட ரூ.1,349 திட்டத்தின் நன்மைகள்:

    முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல் நிறுவனம் ரூ.1,349 திட்டத்தை வழங்குவதை நிறுத்திக்கொண்டது. இது மூன்று போஸ்ட்பெய்ட் கனெக்ஷன் மற்றும் 210 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உட்பட பல நன்மைகளை வழங்கியது. ரூ.1,349 திட்டத்தின் கீழ் ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களை அணுக உதவும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி கனெக்ஷனும், ஒரு வருட அமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தாவும் அணுக கிடைத்தது.

    அறியாதோர்களுக்கு கடந்த ஆண்டு, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் பிளாக் என்கிற புதிய திட்டங்களின் தொகுப்பை அறிமுகம் செய்தது. இது பயனர்களுக்கு போஸ்ட்பெய்ட், டிடிஎச் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை ஒரே பில்லின் கீழ் இணைக்கும் திறனை வழங்குகிறது. கூடுதல் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்டெல்பிளாக் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கும் சலுகைகளுடன் சேர்த்து, தத்தம் தேவைகளைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த திட்டத்தையும் உருவாக்கலாம்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Airtel, Technology

    அடுத்த செய்தி