முகப்பு /செய்தி /வணிகம் / ரத்து செய்யப்பட்ட விமான பயணத்திற்கான பணத்தை திரும்பப் பெற அவதிப்படும் பயணிகள்.. அதிகரிக்கும் புகார்கள்

ரத்து செய்யப்பட்ட விமான பயணத்திற்கான பணத்தை திரும்பப் பெற அவதிப்படும் பயணிகள்.. அதிகரிக்கும் புகார்கள்

விமான கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாமல் விமானப் பயணிகள் அவதி

விமான கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாமல் விமானப் பயணிகள் அவதி

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும், வரையறுக்கப்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் தொடர்பில், பணம் திரும்பப் பெறவது மற்றும் இதர கோளாறுகள் உள்பட 591 பயணிகள் தங்களது புகார்களை பதிவு செய்துள்ளனர்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய விமானப் போக்குவரத்து சேவையானது அண்மைக்காலமாக பல்வேறு தடைகளையும், தொழில்நுட்பக் கோளாறுகளையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரத்து செய்த விமானங்களின் பயணங்களுக்குப் பணம் திரும்பப் பெறுவது என்பது தற்போது கடினமாகியுள்ளது. பல்வேறு விமானங்கள் இத்தகைய புகாருக்கு ஆளாகியுள்ளன.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும், வரையறுக்கப்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் தொடர்பில், பணம் திரும்பப் பெறுவது மற்றும் இதர கோளாறுகள் உள்பட 591 பயணிகள் தங்களது புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய விமானப் போக்குவரத்து ஆணையரகத்தின் தகவலின்படி, 30.3 சதவீத புகார்கள் கட்டணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாகவும், 28.3 சதவீத புகார்கள் விமான இயக்கங்கள் தொடர்பாகவும் வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பயணிகளின் உடைமைகள் தொடர்பாக 11.5 சதவீத புகார்களும், வாடிக்கையாளர் சேவை குறித்து 6.6 சதவீத புகார்களும் வரப்பெற்றுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான புகார்கள் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதை இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கொரோனா காலத்தில் உச்சத்திலிருந்தது:

முன்னதாக, கொரோனா காலகட்டத்தில் விமானங்களை திடீர், திடீரென்று ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டபோது, இதேபோன்று கட்டணங்களைத் திரும்பப் பெறுவதற்கான புகார்கள் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டன என்று விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

Also Read : எல்ஐசி-யில் தினசரி ரூ.29 முதலீடு செய்து ரூ.4 லட்சம் பெறுங்கள் - விவரங்கள் இதோ!

ஜூலை மாதத்தில் தாமதம்:

மிக அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை காரணமாக ஜூலை மாதத்தில் ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதே சமயம், விமானப் போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் அவ்வப்போது விமானப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆய்வில் தெரிய வரும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

மிகுந்த விதிமீறல்களாக டிஜிசிஏ ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களுக்குத் தொடர்புடைய விமான நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட வருகின்றன. அதனை டிஜிசிஏ அதிகாரிகளும் உறுதி செய்கின்றனர். குறிப்பாகப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் எந்தவித சமரசங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.

வழிகாட்டு விதிமுறைகள்:

முன்னதாக, விமானங்களின் பராமரிப்பு தொடர்பாக, விமான தயாரிப்பாளர்கள் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் டிஜிசிஏ சார்பில் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, எந்தவொரு தொழில்நுட்ப பிரச்சினைக்கும் விமானம் புறப்படும் முன்பாகவே தீர்வு காணப்பட்டு வருகிறது.

First published:

Tags: Flight, Flight travel, Ticket booking