Home /News /business /

எரிபொருள் விலை உயர்வால் விமான பயணக் கட்டணங்கள் உயர வாய்ப்பு

எரிபொருள் விலை உயர்வால் விமான பயணக் கட்டணங்கள் உயர வாய்ப்பு

Jet Fuel Hike

Jet Fuel Hike

Jet Fuel Price Hike: உலகில் விமான எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக கடந்த புதன்கிழமையன்று (பிப் 16) உயர்த்தப்பட்டது. டெல்லியில், ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.86,038.16 என்ற விலையில் இருந்த சூழலில், தற்போது அது ரூ.90,519.79 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இனி வரும் காலங்களில் விமானப் பயணச்சீட்டு கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  நாட்டின் பிற மெட்ரோ நகரங்களான கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் விமான எரிபொருள் விலை, முறையே ரூ.94,888.70, ரூ.88,987.20 மற்றும் ரூ.93,371.18 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கடும் நெருக்கடி மற்றும் கடன் சூழலில் சிக்கித் தவிக்கும் விமான நிறுவனங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பதாக இந்த எரிபொருள் விலை உயர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது.

  உலகளாவிய அளவில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கி போட்டது. குறிப்பாக, எண்ணற்ற லாக்டவுன்களை சர்வதேச நாடுகள் அறிவித்த காரணத்தால், விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடிகளை சந்தித்தது. 2019 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 3 அலைகளாக கொரோனா வட்டம் அடித்துவிட்டது.

  Also read:  12வது மாடி பால்கனியில் தொங்கிய படி இளைஞர் செய்த காரியம்... ஷாக்கிங் வீடியோ!

  ஒவ்வொரு முறை கொரோனா தொற்றுகள் அதிகரிக்கும் போதும், விமானங்கள் எந்தவித வருமானமும் இன்றி, விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. வருமானம் இல்லாத போதிலும் விமான பராமரிப்பு செலவு, விமான நிலையங்களுக்கான வாடகை போன்ற செலவுகள் அந்நிறுவனங்களுக்கு சுமையாக அமைந்தன. மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட சில சூழல்களில், சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கை அனுமதியுடன் விமானங்கள் இயக்கப்பட்டதால், கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது.

  கொரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள், அங்கிருந்து ஊர் திரும்பி வரவும், அந்நாடுகளுக்கு திரும்பிச் செல்லவும் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். குறிப்பாக, அரபு அமீரக நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளுக்கு இந்தியாவில் இருந்து குறைவான எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டதால் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. இத்தகைய சூழலில், கொரோனா 3ஆம் அலை தற்போது சற்று ஓயத் தொடங்கியுள்ளதன் காரணமாக விமானப் போக்குவரத்து மற்றும் கட்டணங்கள் சற்று சீரான நிலைக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால், தற்போது எரிபொருள் விலை உயர்வு காரணமாக மீண்டும் கட்டணம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

  Also read:  பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்.. சஸ்பெண்டான ஆசிரியர் மீண்டும் அத்துமீறல் - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

  விமான எரிபொருள் விலை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படுகிறது. தற்போது விமானங்களை இயக்குவதற்கான மொத்த செலவில், 30 சதவீதம் எரிபொருள் செலவுகளுக்காக மேற்கொள்ளப்படுகிறது. உலகில் விமான எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில், இதனை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று விமான போக்குவரத்து நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
  Published by:Arun
  First published:

  Tags: Flight, Flight travel

  அடுத்த செய்தி