நாள் ஒன்றுக்கு 20- 26 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுத்தும் ஏர் இந்தியா..!

தற்போதைய சூழலில் ஏர் இந்தியாவின் கடன் தொகை மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய்.

நாள் ஒன்றுக்கு 20- 26 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுத்தும் ஏர் இந்தியா..!
ஏர் இந்தியா
  • News18
  • Last Updated: January 1, 2020, 3:37 PM IST
  • Share this:
தினமும் 20 முதல் 26 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுத்தி வரும் ஏர் இந்தியா தனியார்மயமாகும் வரையில் தொடர்ந்து செயல்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா தலைவர் சமீபத்திய அந்நிறுவனத்தின் நஷ்ட கணக்குகளை குறிப்பிட்டிருந்தார். நிறுவனம் நிலைக்க போதிய வருமானம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஏர் இந்தியா செயல்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து செயல்படும். ஆனால், ஏர் இந்தியா விரைவில் தனியார்மயமாக்கப்பட வேண்டும். காரணம், தினமும் 20 முதல் 26 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுத்தி வருகிறது. வரிச் செலுத்துவோரின் பணம் இன்னும் லாபகரமானதாகப் பயன்படுத்தப்படலாம்.


தற்போதைய சூழலில் ஏர் இந்தியாவின் கடன் தொகை மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனியார்மயமாக்க செய்த முயற்சி வெற்றி அளிக்கவில்லை. விரைவில் நன்மை நடக்கும். ஏர் இந்தியாவை ஒரு இந்திய நிறுவனத்திடம் விற்கவே முயற்சித்து வருகிறோம்” என்றார்.

மேலும் பார்க்க: மோடியின் திட்டங்கள் உதவவில்லை...இந்தியாவைத் தவிர்க்கும் முதலீட்டாளர்கள்- பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்!
First published: January 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்