• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஊடகங்களில் பேசக் கூடாது - ஊழியர்களை எச்சரிக்கும் ஏர் இந்தியா

ஊடகங்களில் பேசக் கூடாது - ஊழியர்களை எச்சரிக்கும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 55,000 கோடி ரூபாய்க் கடன் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொதுத் துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா அதன் ஊழியர்கள் யாரும் ஊடகங்கள் மற்றும் சமுக வலைதளங்களில் பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    நிதி சிக்கலில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் அண்மையில் சர்வீஸ் செய்யப் பணம் இல்லாமல் 20 விமானங்களை தரையிறக்கம் செய்தது.

    இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர்கள் யாரும் ஊடகங்கள் மற்றும் சமுக வலைத்தளங்களில் பேசக் கூடாது, இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 55,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. 2018-ம் ஆண்டு இது 45,000 கோடி ரூபாயாக இருந்தது.

    தொடர்ந்து கடன் அதிகரித்து வரும் நிலையில் எப்படி ஊழியர்களுக்குச் செய்யப்படும் செலவுகளை எல்லாம் குறைக்கலாம் என்று ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது.

    அதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ள வசந்த விஹார் காலணியில் 676 ஏர் இந்திய ஊழியர்களுக்கு வழங்கியிருந்த ஆடம்பர வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: