பாகிஸ்தானால் ஏர் இந்தியாவுக்கு ரூ.300 கோடி இழப்பு!

இந்திய வான் எல்லையிலும் இதே போன்ற ஒரு தடை விதிக்கப்பட்து. ஆனால் இதை சில மணி நேரங்களில் இந்திய அரசு திரும்பப்பெற்றது.

பாகிஸ்தானால் ஏர் இந்தியாவுக்கு ரூ.300 கோடி இழப்பு!
விமானப் போக்குவரத்து
  • News18
  • Last Updated: April 30, 2019, 3:09 PM IST
  • Share this:
இந்திய விமானங்களுக்கான பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டதால் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாலக்கோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா விமான தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.

இதையடுத்து, இருநாட்டு வான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், விமானங்களுக்கான வான் எல்லையை பாகிஸ்தான் மூடியது.


இதனால், இந்தியாவில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

அத்துடன், விமான ஊழியர்களுக்கான செலவு அதிகரிப்பு, விமான சேவை குறைப்பு போன்றவற்றால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வீதம் 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய வான் எல்லையிலும் இதே போன்ற ஒரு தடை விதிக்கப்பட்து. ஆனால் இதை சில மணி நேரங்களில் இந்திய அரசு திரும்பப்பெற்றது. ஆனால் பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்தும் தடை தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை நீட்டித்தது.பாகிஸ்தான் வான் எல்லையில் இருந்த தடையால் இந்திய விமானங்கள் மட்டுமில்லாமல் பிற நாட்டு விமான நிறுவனங்களும் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் இழப்புகளை சந்தித்தன என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க:
First published: April 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading