• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஏர் இந்தியா வழங்கும் கடைசி நிமிட டிக்கெட் கட்டண தள்ளுபடி!

ஏர் இந்தியா வழங்கும் கடைசி நிமிட டிக்கெட் கட்டண தள்ளுபடி!

விமானப் போக்குவரத்து

விமானப் போக்குவரத்து

விமானம் கிளம்பும் நாள் மற்றும் நேரம் நெருங்க... நெருங்கக் கட்டணம் உயர்ந்துகொண்டே போகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவை முடங்கியதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம் விமான பயணிகளைக் கவருவதற்காக கடைசி நிமிட கட்டணத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

    ஏர் இந்தியா வழங்கும் இந்த கடைசி நிமிட சலுகையின் கீழ் விமானம் கிளம்ப 3 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், 50 சதவீத சலுகை விலையில் டிக்கெட்களை புக் செய்யலாம்.

    விமான டிக்கெட் கட்டணங்களைப் பொருத்த வரையில் ரயிலில் உள்ள பிரீமியம் தட்கல் சேவை போன்றுதான் இதுவும். விமானம் கிளம்பும் நாள் மற்றும் நேரம் நெருங்க நெருங்க கட்டணம் உயர்ந்துகொண்டே போகும்.

    ஆனால், ஏர் இந்தியா அதிலிருந்து சற்று மாறி அவசரமாக விமான பயணம் செய்யும் பயணிகளுக்கும் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது.

    எப்படிப் பார்த்தாலும் கடைசி நாளில் விமான டிக்கெட் புக் செய்யும் போது ஒரு மாதத்திற்கு முன்பிருந்ததை விட கட்டணம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

    ஆனால் ஏர் இந்தியாவின் "hefty discount" சலுகையின் கீழ் 50 சதவீத டிக்கெட் கட்டணம் குறைவாகக் கிடைக்கும் என்பதால் கடைசி நிமிடத்தில் விமான பயணம் செய்பவர்களுக்கு நல்ல ஒரு சலுகையாகத் தான் உள்ளது.

    ஏர் இந்தியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் செயலி மற்றும் விமான டிக்கெட் ஏஜெண்ட் மூலமாகப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: