ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான கேம்ப்பெல் வில்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கக் கூடுதல் விமானங்களைக் கவர் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இயற்கை பேரழிவு, வானிலை, உள்நாட்டுப் போர், கலவரம், விமானச் சேவையை முடக்கும் படி அரசு பிறக்கும் உத்தரவு, வேலைநிறுத்தங்கள் தொழிலாளர் போராட்டம், அரசியல் ஸ்திரமின்மை ஆகிய காரணங்களால் விமானச் சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவது, தாமதமாவது போன்றவற்றால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்க ஏர் இந்தியா நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே டாடா குழுமம் அதனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பயணச்சேவையில் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்த முயன்று வருகிறது.
குறிப்பாகப் பயணிகள் பயண விவரங்கள் குறித்து அறிய, பிளாக் டைமிங், விமான நிலையங்களை இணைக்கும் நேரம், விமானம் மற்றும் பணியாளர்களின் ஷிப்ட் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளது. ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான கேம்ப்பெல் வில்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கக் கூடுதல் விமானங்களைக் கவர் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
பயணிகள் விரும்பக்கூடிய அனைத்து ஸ்மார்ட் விஷயங்களையும் சீசன் வாரியாக அரங்கேற்ற உள்ளதாகவும், விமான நிலையம் சார்ந்த சிக்கல்களை அறிந்து கொள்ள விமான நிலையம்/ மையக் கட்டுப்பாடு/ பிராந்திய கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுவையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானச் சேவையில் ஏற்படும் தாமதங்கள், அட்டவணை மாற்றங்கள், ரத்து போன்ற தகவல்களை முன்கூட்டியே விமான பயணிகளுக்குத் தெரிவிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் இடத்திற்கான விமானச் சேவையை சுயமாக மாற்றிக்கொள்ள முடியும்.
Also Read : 5ஜி சேவையில் புரட்சி... 6-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் ஜியோ!
இதுவரை வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே விமானச் சேவை குறித்து அறிவிக்கக்கூடிய 7 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு மாதங்களுக்கு அனைத்தையும் பட்டியலிட ஏர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுக்கள் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஏலம் மூலமாகக் கைப்பற்றியது. தங்களது முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை அடுத்துக் கடந்த மாதம் கூட 24 உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திடம் 70 விமானங்கள் உள்ள நிலையில், அவற்றில் 54 விமானங்கள் சேவை வழங்கி வருகின்றன. மீதமுள்ள 16 விமானங்கள் 2023ம் ஆண்டு முதல் படிப்படியாகச் சேவையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air India, Flight, Flight travel