• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • எஞ்சினை பழுது பார்க்க காசில்லை... 20 விமானங்களை தரையிறக்கிய ஏர் இந்தியா...!

எஞ்சினை பழுது பார்க்க காசில்லை... 20 விமானங்களை தரையிறக்கிய ஏர் இந்தியா...!

விமான சேவை பாதிப்பு

விமான சேவை பாதிப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி சிக்கலால் முடங்கியுள்ள நிலையில், ஏர் இந்தியாவும் தங்களது 20 விமானங்களைத் தரையிறக்கம் செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொதுத்துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா எஞ்சின் பழுது பார்க்க நிதியில்லாததால் 20 விமானங்களைத் தரையிறக்கம் செய்துள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 127 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் சில விமானங்களின் எஞ்சின் உள்ளிட்டவற்றைப் பழுது பார்க்க 1,500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

    ஆனால், ஏற்கனவே நிதி சிக்கலில் ஏர் இந்தியா உள்ளதால், சர்வதேச விமான பயண சேவைக்குப் பயன்படுத்தி வந்த 20 விமானங்களைத் தற்காலிகமாக தரையிறக்கம் செய்துள்ளது.

    தரையிறக்கம் செய்த விமானங்களில் 14 A320s விமானங்களும், 4 போயிங் B787-800s விமானங்களும், 2 போயிங் B777s விமானங்களும் அடங்கும்.

    ஏற்கனவே, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி சிக்கலால் முடங்கியுள்ள நிலையில், ஏர் இந்தியாவும் தங்களது 20 விமானங்களைத் தரையிறக்கம் செய்துள்ளது விமான பயணிகளிடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில், ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முடங்கியதைத் தொடர்ந்து, அவர்களுக்குச் சொந்தமான விமானங்களைக் குத்தகைக்குக் கேட்ட ஏர் இந்தியாவால் ஏன் இந்த விமானங்களைச் சீரமைக்க முடிவில்லை? என்றும் விமான பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: