விரைவில் ஏசி, டிவி விலை குறைய வாய்ப்பு..!

வர இருக்கும் இடைக்காலப் பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறைக்கு இப்படி வரி விகிதத்தினைக் குறைத்ததும் ஒரு காரணம் ஆகும்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 7:09 PM IST
விரைவில் ஏசி, டிவி விலை குறைய வாய்ப்பு..!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: December 7, 2018, 7:09 PM IST
ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் விரைவில் கூட உள்ள நிலையில் அதில் ஏசி, டிவி, கேமரா உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்புள்ளது.

வர இருக்கும் டிசம்பர் 17-ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஆடம்பர பொருட்கள் பட்டியலில் உள்ள சில பொருட்கள் மீதான வட்டி விகிதங்கள் 18 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பட்ஜெட் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் உள்ளதால் ஜிஎஸ்டி வகிதத்தைக் குறைப்பதன் மூலம் மக்களைக் கவர அரசுக்கு வாய்ப்புகள் உள்ளது.

அது மட்டும் இல்லாமல் 18 சதவீத பிரிவில் பல பொருட்களை 5 சதவீத ஜிஎஸ்டி வட்டி விகிதத்தின் கீழ் கொண்டு செல்லவும் திட்டமிட்டு வருவதாக இது குறித்து விவரம் அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் MoneyControl.com தளத்திடம் தெரிவித்துள்ளார்.

விழாக் காலத்தில் மக்கள் அதிகம் நுகவர்வதை ஊக்குவிக்கக் குளிர் சாதன பெட்டி, வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் சாதனங்கள், வாசனைத் திரவங்கள் மற்றும் பல கைவினை பொருட்களின் ஜிஎஸ்டி விகிதத்தை ஜூலை மாதம் குறைத்தனர்.

வர இருக்கும் இடைக்காலப் பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறைக்கு இப்படி வரி விகிதத்தினைக் குறைத்ததும் ஒரு காரணம் ஆகும்.

ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் மத்திய அரசு 7.76 லட்சம் கோடி ரூபாயியை ஜிஎஸ்டி கீழ் வசூலித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு 12 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்வதை இலக்காக வைத்துள்ளது.
Loading...
மேலும் பார்க்க: அரசு விழாவில் அதிமுகவினரிடையே மோதல்

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...