முகப்பு /செய்தி /வணிகம் / விவசாயிகள் கவனத்திற்கு... இலவச மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை அறிவித்தது மின்வாரியம்..!

விவசாயிகள் கவனத்திற்கு... இலவச மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை அறிவித்தது மின்வாரியம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Three Phase Power | விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அரசால் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சாரம் வழங்கப்படும் நேரம் தொடர்பாக மின்வாரியம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. டெல்டா பகுதிகளில் குரூப் 1, குரூப் 2  இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு  நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும்  குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை  9.30 மணியில் இருந்து ம‌திய‌ம்  3.30  மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியிலிருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published: