முகப்பு /செய்தி /வணிகம் / வானிலை முதல் பூச்சி மேலாண்மை வரை... விவசாயிகளுக்கு உதவும் 'ஸ்மார்ட் அக்ரி திட்டம்' தொடக்கம்!

வானிலை முதல் பூச்சி மேலாண்மை வரை... விவசாயிகளுக்கு உதவும் 'ஸ்மார்ட் அக்ரி திட்டம்' தொடக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

விவசாயிகளுக்கு வானிலை தகவல் மையங்கள், மண் உறுதிகள், பூச்சி கட்டுப்படுத்திகள், மற்றும் பயிர் கேமராக்கள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

குன்னூரில் அதிகப்படியான தேயிலை தோட்டங்களும் காய்கறி தோட்டங்களும் உள்ளன. இங்கு சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து அதனை சமவெளி பகுதிக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் 193 கிராமங்களில் 10,000 மேற்பட்ட சிறு குறு விவசாயிகளுக்கு ஸ்மார்ட் அக்ரி திட்டம் என்ற திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் துவங்கி வைத்தார். இந்த திட்டமானது சிறு குறு விவசாயிகளுக்கு இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனப்படும் ஐஓபி அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.

அதன்படி விவசாயிகளுக்கு வானிலை தகவல் மையங்கள், மண் உறுதிகள், பூச்சி கட்டுப்படுத்திகள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும். மேலும் பொருத்தப்பட்ட இந்த தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய விவசாய காரணிகளான மண், காற்றின் தரம், காற்றின் வேகம், திசை வயலில் உள்ள பூச்சிகள், ஊர் விளைவிக்கும் பிராணிகளின் எண்ணிக்கை மற்றும் பயிர் வளரும் வேகம் போன்றவை குறித்து தகவல்களை கிடைக்கும். இதற்காக இண்டஸ் டவர்ஸ் மற்றும் வோட ஃபோன்  ஃபவுண்டேஷன் இணைந்து புதிய வகை செயலி ஒன்று அறிமுகம் செய்தது. இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வகையில் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்பி அம்ரித்  பேசுகையில், ‘ஸ்மார்ட் அக்ரி திட்டம் போன்ற புதுமையான முன்னேற்பாடுகளை அறிமுகம் படுத்துவதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மண்ணின் தரம், பூச்சி தடுப்பு மேலாண்மை, வானிலை விளைநிலங்கள் தொடர்பான அனைத்து காரணிகள் பற்றிய நுண்ணறிவை வழங்க முடியும். விவசாய சந்தைகளுக்கான அணுகல்  வழங்கி, உலகளவில் வர்த்தக போட்டிக்கு விவசாயிகளை தயார்படுத்தப்படுகிறது. விவசாய சமூகத்தினர் எதிர் கொள்ளும் சவால்களை திறம்பட கையாள முடியும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய தேயிலை செயல்வாரிய இயக்குனர் முத்துக்குமார், குன்னூர் கோட்டாட்சியர் புவனேஷ் குமார், வட்டாட்சியர் சிவக்குமார், ஜோசப் மோசஸ், ரமேஷ், பிரதீப் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு இலவசமாக விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர் : ஐயாசாமி (ஊட்டி)

First published:

Tags: Agriculture, Apps, Farmers