கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். சிவமோகா செல்லும் பிரதமர், அங்கு 450 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்துவைக்கிறார்.
சிவமோகாவில் இரண்டு ரயில்வே திட்டங்கள் மற்றும் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், 128 கிராமங்களுக்கான பலவகை கிராமங்கள் திட்டத்தை தொடங்கிவைக்கும் பிரதமர், மேலும் 3 கிராமங்களை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைக்கிறார். இதேபோல, 44 ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பெலகாவி செல்லும் பிரதமர், விவசாயிகள் நலநிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 13வது தவணை நிதியை விடுவிக்கிறார். 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரவுவைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பெலகாவி ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை பிரதமர் திறந்துவைக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, PM Kisan, PM Narendra Modi, Prime Minister Narendra Modi