முகப்பு /செய்தி /வணிகம் / "8 மணிக்கு மேல் அரசு பேருந்தில் விவசாயிகள் இலவசமாக பயணிக்கலாம்!” : பாமக-வின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

"8 மணிக்கு மேல் அரசு பேருந்தில் விவசாயிகள் இலவசமாக பயணிக்கலாம்!” : பாமக-வின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

மாதிரி படம்

மாதிரி படம்

உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்கள் இரவு 8மணிக்கு பிறகு அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் - பாமக வேளாண் நிதிநிலை அறிக்கை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

வெள்ளம் பாதித்த ஏக்கருக்கு 50ஆயிரம் ரூபாய் இழப்பீடு, வேளாண்துறைக்கு 2 புதிய அமைச்சகங்கள் உள்ளிட்டவை பாட்டாளி மக்கள் கட்சியின் 16ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிதிநிலை அறிக்கை 73ஆயிரம் கோடி ரூபாய் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தக் கூடாது எனவும், தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் நிழல் நிதிநிலை அறிக்கையில் பாமக கூறியுள்ளது.

அரியலூர் சோழர் பாசனத் திட்டம், தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம், அத்திக்கடவு அவினாசித் திட்டம், கொள்ளிடம் தடுப்பணை, காவிரி-குண்டாறு இணைப்பு ஆகியவை செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சை, வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதிய பல்கலைக்கழங்கள் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பாமக, வேளாண்துறை 3 ஆக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்கள் இரவு 8 மணிக்கு பிறகு அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Dr Ramadoss, Ramadoss